“தயவு செஞ்சு எங்கள வாழ விடுங்க” – ஆணவப் படுகொலை செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் பாஜக எம்.எல்.ஏ மகள்!

எனக்கோ என் கணவருக்கோ ஏதாவது ஆனால் உங்கள் ஒருவரையும் விட்டுவைக்கமாட்டேன் - வீடியோவில் பேச்சு

By: Updated: July 12, 2019, 03:38:38 PM

Asad Rehman

UP BJP MLA Daughter Sakshi Mishra married Dalit man Ajitesh : உத்திரப்பிரதேசத்தின் பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா எனப்படும் பப்புர் பாரத்துல். இவருக்கு சாக்‌ஷி மிஸ்ரா என்ற 23 வயது மகள் உள்ளார். சாக்‌ஷி ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவர் மணம் முடித்த அஜிதேஷ் (29) ஒரு தலித் இளைஞராவார்.  சாக்‌ஷி – அஜிதேஷின் கலப்பு திருமணம், சாக்‌ஷியின் தந்தைக்கும், சகோதரருக்கும், குடும்பத்தினருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வர்கள் இருவரும் சாக்‌ஷிக்கும், அஜித்தேஷூக்கும் பல்வேறு வகையில் தொல்லை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாக்‌ஷி தன்னுடைய சமூகவலை தள பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஒன்றில், “எனக்கோ, என் கணவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் அதற்கு விக்கி பாரத்துலும், ராஜூவ் ராணாவும் தான்ன் காரணம். குறிப்பாக தன்னுடன் ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு எங்களை மிரட்டி வரும் ராணா தான் காரணம். நான் இறந்துவிடலாம். ஆனால் அவனுடைய மொத்த குடும்பத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டுத்தான் இறப்பேன்” என்று கூறியுள்ளார் சாக்‌ஷி.

சாக்‌ஷியின் குடும்பத்தினர் தரும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சாக்‌ஷி தன்னுடைய தந்தை, சகோதரன், மற்றும் அவருடைய கூட்டளிகள் மீது புகார் அளித்து, பாதுகாப்பு கோரியுள்ளார்.  சாக்‌ஷி பட்டபடிப்பு முடித்துவிட்டு பத்திரிக்கைத் துறையில் மேற்படிப்பினை படிக்க உள்ளார். அஜிதேஷ் ஹார்வேர்ட் கடை வைத்து நடத்துகிறார்.

மகளின் குற்றச்சாட்டை மறுக்கும் தந்தை

இது குறித்து சாக்‌ஷியின் தந்தை மற்றும் பிர்ஹாரி சைன்பூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான ராஜேஷ் மிஸ்ராவிடம் கேட்கும் போது என்னுடைய மகள் மேஜர். அவருடைய வாழ்க்கைத் துணை குறித்த முடிவுகளை மேற்கொள்ள அவருக்கு முழுமையான உரிமைகள் உண்டு என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு முற்றிலுமாக அமைந்திருக்கிறது சாக்‌ஷியின் மற்றொரு வீடியோ. அதில் அவர், இதனை நீங்கள் ஏற்று தான் ஆக வேண்டும். நீங்களும் நிம்மதியாக வாழுங்கள். என்னையும் வாழ விடுங்கள. என்னைத் துரத்துவதற்காக நீஙகள் அனுப்பிய நாய்களிடம் சொல்லுங்கள், எல்லாம் என் தலைக்கு மீறி போனால் அவர்கள் அனைவரும் ஜெயிலில் இருக்க வேண்டியது உறுதி. அபியை (அஜிதேஷை) எதுவும் தொந்தரவு செய்யாதீர்கள். அவரோ அவருடைய குடும்பத்தினரோ எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் அருகே அஜிதேஷ் அமர்ந்துள்ளார்.

மேலும் படிக்க : மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை: கனகராஜை தொடர்ந்து வர்ஷினி பிரியாவும் மரணம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Up bjp mla daughter sakshi mishra married dalit man ajitesh asks her dad to stop chasing them

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X