மல்யுத்த வீரரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி : காரணம் என்ன? வைரல் வீடியோ

Tamil National Update : 15 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில், வயது அதிகமான ஒரு வீரர் தன்னை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று போட்டி அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Tamil National Update : ராஞ்சியில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக எம்பி பிரிஜ்பூஷன் ஷவ்ரன் சிங் மல்யுத்த வீரர் ஒருவரை மேடையில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், உத்திரபிரதேச மாநிலம், கைசர்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் ஷவ்ரன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிலையில், 15 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில், வயது அதிகமான ஒரு வீரர் தன்னை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று போட்டி அமைப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இந்த போட்டி 15 வயதுக்குட்பட்டோருக்கானது அதனால் உங்களை விளையாட அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் அந்த வீரர் தன்னை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மேடையில ஏறிய அவர், தன்னை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறி எம்பியிடம் தெரிவித்ததாக தெரிகிறது. ஆனால் போட்டியாளர்கள் கூறிய விதிமுறைகளை எடுத்து கூறிய எம்பி விளையாட அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் அந்த வீரர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொறுமை இழந்த எம்பி பிரிஜ்பூஷன் ஷவ்ரன் சிங் பொது இடம் என்று கூட பாராமல், மல்யுத்த வீரரை மேடையிலேயே வைத்து கன்னத்தில் அறைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போட்டி அமைப்பாளர்கள் அந்த வீரரை மேடையை விட்டு வெளியில் அழைத்துச்சென்றனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Up bjp mp brij bhushan sharan singh slaps young wreastler in public

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express