scorecardresearch

வீட்டு வரி பாதி குறைப்பு, தண்ணீர் வரி தள்ளுபடி: உ.பி உள்ளாட்சி தேர்தலை குறி வைக்கும் ஆம் ஆத்மி

உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் களமாடும் ஆம் ஆத்மி கட்சி வீட்டு வரியை பாதியாகக் குறைப்பதாகவும், வெற்றிபெறும் நகராட்சிகளில் தண்ணீர் வரியைத் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

UP civic polls AAP’s next big target Tamil News
Claiming that the people were highly influenced by the principles of AAP national convener and Delhi CM Arvind Kejriwal, the MP said this was the reason the people of the national capital elected him thrice for his work in education, health, transport and power sectors. (PTI)

Uttar Pradesh Local Body Election Tamil News: உத்தரப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), வீட்டு வரியை பாதியாகக் குறைப்பதாகவும், வெற்றிபெறும் நகராட்சிகளில் தண்ணீர் வரியைத் தள்ளுபடி செய்வதாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

லக்னோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜ்யசபா எம்.பி.யும், கட்சியின் மாநில பொறுப்பாளருமான சஞ்சய் சிங், “தண்ணீர் வரியை தள்ளுபடி செய்வோம். தலைவர் பதவி கிடைக்கும் இடங்களில் வீட்டு வரியை பாதியாக குறைப்போம். நகரங்கள் சுத்தம் செய்யப்படுவதையும், அங்குள்ள மக்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்.” என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கைகளால் மக்கள் பெரிதும் ஏர்க்கப்பட்டுள்னர் என்று கூறிய சஞ்சய் சிங் எம்.பி., கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பணிக்காக தேசிய தலைநகர் மக்கள் அவரை மூன்று முறை தேர்ந்தெடுத்ததற்கு இதுவே காரணம் என்றும் கூறினார்.

மேலும் அவர், “உத்தரபிரதேசத்தில் உள்ள 763 நகராட்சிகளில், 633 நகர்ப்புற அமைப்புகளுக்கு பொறுப்பான தலைவர்களை ஆம் ஆத்மி நியமிக்கும். தலைவர் மற்றும் மேயர் பதவிக்கான தேர்தலில் நாங்கள் கடுமையாக போட்டியிடுவோம். பிரதமர் மோடிக்கும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் நாட்டு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். இந்த முறை மாநில மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறத் தவறிய போதிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது, ராஜஸ்தான் போன்ற இந்தியாவின் மத்தியான பகுதியான மற்ற மாநிலங்களில் முன்னேற்றம் பெறுவதைப் பார்க்கும்போதும், உ.பி.யில் தக்கவைக்கும் கட்சியின் உத்தியின் ஒரு பகுதியாகும்.

இன்று திங்கள்கிழமை, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுகிறார். டிசம்பரில் நடந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் (எம்சிடி) வெற்றி பெற்ற பிறகு, உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் திட்டங்கள் உறுதியாகி, அதில் பாஜகவை வீழ்த்தியது. 2017 ஆம் ஆண்டு நடந்த உ.பி மாநில உள்ளாட்சித் தேர்தலில், இரண்டு ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் நகர் பஞ்சாயத்து தலைவர்களாகவும், மூன்று பேர் முனிசிபல் சேர்மன்களாகவும், 17 பேர் நகர் மன்ற தலைவர்களுக்கும், 19 பேர் நகர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நகர் பஞ்சாயத்துகள் மற்றும் நகர் மன்ற தலைவர்கள் மற்றும் மேயர் பதவிகளுக்கான தேர்தல் விண்ணப்பங்களை பரிசீலிக்க ஆம் ஆத்மி மாநில அளவிலான குழுவை அமைத்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட ஆணையம், தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) இடஒதுக்கீடு குறித்த 350 பக்க அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வியாழக்கிழமை சமர்ப்பித்தது. ஓபிசி இடஒதுக்கீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையில், எதிர்க்கட்சிகளை குறிவைக்க விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் மத்திய பாஜக அரசாங்கத்தை தாக்கிய சஞ்சய் சிங், “நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பிரதமர் தொடர்ந்து ஆதாரமற்ற வழக்குகளைப் பதிவு செய்கிறார். வங்காளத்தில் டிஎம்சி (தலைவர்கள்) மீது 30 வழக்குகள், காங்கிரஸுக்கு எதிராக 26 வழக்குகள், பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது 10 வழக்குகள், பிஎஸ்பி மீது 5 வழக்குகள், சமாஜ்வாதி கட்சி மீது 4 வழக்குகள், என்சிபி மீது 3 வழக்குகள், தேசியவாத காங்கிரஸ் மீது 3 வழக்குகள் என சிபிஐ பதிவு செய்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் அரசு குறிவைக்கிறது. பல லட்சம் கோடி ஊழல் செய்த கார்ப்பரேட் நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? அவர்களும் விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்படுவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Up civic polls aaps next big target tamil news