Advertisment

உ.பி. உள்ளாட்சித் தேர்தல்: மிக மோசமான செயல்பாடு; காங்கிரசின் நம்பிக்கை கீற்று

முக்கியமான இடங்களில், காங்கிரஸ் மாநில கட்சிகளான எஸ்.பி, பி.எஸ்.பி-யை 2-வது இடத்திற்கு தள்ளியது. இது 2024 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக காங்கிரசை கொண்டு செல்லும் என நம்புகிறது.

author-image
WebDesk
New Update
UP ULB polls, UP Urban Local Body elections, உ.பி. உள்ளாட்சித் தேர்தல்: மிக மோசமான செயல்பாடு, காங்கிரசின் நம்பிக்கை கீற்று, UP Congress, Uttar Pradesh politics, Uttar Pradesh, Tamil indian express

உ.பி. உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரசின் நம்பிக்கை கீற்று

முக்கியமான இடங்களில், காங்கிரஸ் மாநில கட்சிகளான சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியை 2-வது இடத்திற்கு தள்ளியது. இது 2024 லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக காங்கிரசை கொண்டு செல்லும் என நம்புகிறது.

Advertisment

உத்தரப் பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு வரை கடந்த காலங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றபோது. உத்தரப் பிரதேசத்தில் 1989 முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், முனிசிபல் கார்ப்பரேஷன்களில் 100-க்கும் மேற்பட்ட கார்ப்பரேஷன் உறுப்பினர் இடங்களையும், நகர் பாலிகா பரிஷத் மற்றும் நகர் பஞ்சாயத்துகளில் கணிசமான இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

உத்தரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2023-, காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களைப் பார்க்கும்போது, அம்மாநிலத்தில் உள்ள 17 மேயர் பதவிகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் போனது மட்டுமல்லாமல், மற்ற பதவிகளில் அதன் எண்ணிக்கையும் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது - 1,420 இடங்களில் 77 கார்ப்பரேஷன் உறுப்பினர்கள், 199 பேர்களில் 4 நகர் பஞ்சாயத்து தலைவர்கள், தேர்தலில் 544 நகர் பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் வெறும் 14 பதவிகள் பெற்றிருந்தாலும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் வாய்ப்பு பற்றி நம்பிக்கை அளிக்க ஒரு கதை இருக்கிறது.

இருப்பினும், உண்மையில் காங்கிரசின் சில நம்பிக்கைகளுக்கு காரணம் இருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எண்ணிக்கை வெகுவாகச் சுருங்கியிருக்கும் வேளையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் சில இடங்களில் கொடுத்துள்ள கடுமையான போட்டியே அந்த நம்பிக்கை ஆகும்.

“இந்தத் தேர்தல்களில் காங்கிரசுக்கு நம்பிக்கையூட்டும் சில காரணிகள் உள்ளன. வாக்காளர்கள் மாநிலக் கட்சிகளை இனி நம்பவில்லை என்றும், பா.ஜ.க-வுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் முடிவுகள் காட்டினாலும், அடித்தட்டு மக்களை, அதாவது நகர் பஞ்சாயத்துகளை காங்கிரஸ் அதிகமாகச் சென்றடைய முடிந்தது. எண்ணிக்கையை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால், எங்கள் வேட்பாளர்கள் எல்லா நிலைகளிலும் நல்ல போட்டியைக் கொடுத்தனர்.” என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரிஜ்லால் காப்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், “மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகத் தொடங்கும்போது, கட்சிக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் என்ன வேலை செய்தோம் என்ன செய்யவில்லை, எங்களின் பலம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை ஒரு பகுதியாக மதிப்பாய்வு செய்வதோடு தொடங்குவோம்” என்று கூறினார்.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரிஜ்லால் காப்ரி காப்ரி மேலும் எதையும் வெளியிடவில்லை என்றாலும், முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தபோதிலும், மொராதாபாத், ஷாஜஹான்பூர் மற்றும் ஜான்சி போன்ற நகரங்களில் உள்ள மேயர் உட்பட சில இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு நெருக்கமான போட்டியை அளித்தனர் என்பதை முடிவுகளை உன்னிப்பாகக் கவனிக்கிறது.

மொராதாபாத்தில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வினோத் அகர்வால் 1.21 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார், அதாவது மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 41.71% வாக்குகள் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் முகமது ரிஸ்வான் சுமார் 1.17 லட்சம் வாக்குகள் (40.46%) பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பா.ஜ.க-வைத் தவிர, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த போதிலும் காங்கிரஸ் வேட்பாளரே கடும் போட்டியை அளித்தார். அதே நேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் தலா 5 சதவீத வாக்குகளைப் பெற்றனர்.

இதேபோல், புதிதாக உருவாக்கப்பட்ட ஷாஜஹான்பூர் மாநகராட்சியில், முன்னாள் காங்கிரஸ் தொண்டர் அர்ச்சனா வர்மா 80,000 வாக்குகள் அதாவது 49% வாக்குகள் பெற்று பா.ஜ.க வேட்பாளராக வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிகத் இக்பால் 50,484 வாக்குகள் அதாவது சுமார் 31% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த தேர்தலில் முஸ்லிம்-தலித் சோசியல் இன்ஜினியரிங்கை பரிசோதித்த பகுஜன் சமாஜ் கட்சியின் ஷஃபுக்தா அஞ்சும் 12% வாக்குகளைப் பெற்றார். அதாவது, மொத்தம் பதிவான வாக்குகளில் 3.4% வாக்குகளைப் பெற்றார்.

ஜான்சி முனிசிபல் கார்ப்பரேஷனில், பா.ஜ.க-வின் பிஹாரி லால் ஆர்யா 123503 வாக்குகள் (57%) பெற்று வெற்றி பெற்றார். காங்கிரசின் ராம் தாஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். வெற்றி வித்தியாசம் பெரியதாக இருந்தாலும், மொத்த வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் 18.47% பெற்றார், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்தனர். அவர்கள் தலா 9% வாக்குகளைப் பெற்றனர்.

இதற்கிடையில், வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் மூன்றாவது இடம் பிடித்தார். 2.9 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற பா.ஜ.க-வின் அசோக் குமார் திவாரிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 94,000 வாக்குகள் அதாவது 15% வாக்குகளைப் பெற முடிந்தது. சமாஜ்வாடி கட்சியின் ஓம் பிரகாஷ் சிங் 1.58 லட்சம் வாக்குகள் அதாவது (25%) வாக்குகள் பெற்றார்.

காங்கிரஸ் தலைவர்கள் இந்த எண்ணிக்கையை ஆய்வு செய்யும் போது, தங்கள் வேட்பாளர்கள் பல நகர் பஞ்சாயத்து மற்றும் நகர் பாலிகா பரிஷத் தொகுதிகளிலும் பா.ஜ.க-வுக்கு நெருக்கமான போட்டியை அளித்தனர் என்று கூறுகிறார்கள்.

“கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எங்கள் தொண்டர்களுக்கு ஊக்கத்தை அளித்திருக்கும் இந்த நேரத்தில், இந்த சிறிய வெற்றிகள் மற்றும் நெருக்கமான போட்டிகள்கூட மனதைக் கவரும். இந்த முடிவுகள் 2024 லோக்சபா தேர்தலுக்கான வியூகத்தை தயார் செய்ய உதவும், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில்கூட மக்கள் சமாஜ்வாடி கட்சி அல்லது பகுஜன் சமாஜ்வாடி கட்சியை மாற்றாக கருதவில்லை என்பதை கருத்தில் கொண்டு, பா.ஜ.க-வுக்கு முக்கிய மாற்றாக எங்களை முன்னிறுத்துவோம். இது எங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தருகிறது” என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

கடந்த காலங்களைப் போல இல்லாமல், இந்த முறை அனைத்துக் கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆக்ரோஷமாக பங்கேற்று, அனைத்து மட்டங்களிலும் தங்கள் கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

உ.பி.யில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிகளின் விவரம்:

2023

மேயர்-0

கார்ப்பரேஷன் உறுப்பினர்கள்- 77

நகர் பாலிகா பரிஷத் தலைவர்கள்- 4

நகர் பாலிகா தலைவர்கள்- 14

2017

மேயர் -0

கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் - 110

நகர் பாலிகா பரிஷத் தலைவர்கள் - 9

நகர் பாலிகா தலைவர்கள் - 17

2012

மேயர் - 0

கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் - 100

நகர் பாலிகா பரிஷத் தலைவர்கள் - 14

நகர் பாலிகா தலைவர்கள் - 21

2006

மேயர் - 12 இல் 3

கார்ப்பரேஷன் உறுப்பினர்கள் - 151

நகர் பாலிகா பரிஷத் தலைவர்கள் - 17

நகர் பாலிகா தலைவர்கள் - 26

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Uttar Pradesh Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment