பெண்களுக்கு எதிரான கிரிமினல்களின் படங்களை வீதிகளில் ஒட்ட நடவடிக்கை: உ.பி-யில் அதிரடி

குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டனர். எஸ்சி / எஸ்டி (Prevention of Atrocities) சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது.

By: September 25, 2020, 12:37:54 PM

Women Harassment Tamil News: கடந்த வியாழக்கிழமை, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பெண்களை பாலியல் வன்முறைகளுக்கு ஈடுபடுத்தும் நபர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் பதிக்கப்பட்ட சுவரொட்டிகளை பொது இடங்களில் ஓட்டுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

‘பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உண்டாக்கும் குற்றவாளிகளின் சுவரொட்டிகளை இதுபோன்ற குற்றவாளிகளுக்கு உதவி செய்பவர்களின் பெயர்களுடன் சாலை சந்திப்புகளிலும் பொது இடங்களிலும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்வார்கள்’ என முதல்வர் உத்தரவிட்டதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை கான்பூரில் 21 வயதான தலித் பெண்ணை இரண்டு இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் வழக்குகளில் பதிவு செய்யப்பட்டனர். எஸ்சி / எஸ்டி (Prevention of Atrocities) சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய டிஜிபி ஹிதேஷ் சந்திர அவஸ்தி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களின் சுவரொட்டிகளை வைப்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், இன்னும் அதிகாரப்பூர்வ உத்தரவைப் அவர் பெறவில்லை என்றும் கூறினார். “இதுபோன்ற எந்தவொரு தகவலையும் நான் இதுவரை பெறவில்லை. நாங்கள் அதைப் பெற்றவுடன், அதற்கேற்றபடி செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Up cm asks officials to put up posters on women abusers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X