உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 2.27 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் மத்திய அரசின் மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற, ஜாட் இன மக்கள்’ இந்த இடங்களில் பெரும்பான்மையான ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
கடும் போட்டி நிலவும் முதல் சுற்றில், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) மற்றும் ராஷ்ட்ரிய லோக்தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகளின் மறுமலர்ச்சி கூட்டணியில் இருந்து’ ஆளும் பாஜக கடும் சவாலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின்’ 9 அமைச்சர்களின் தலைவிதியை முதல் கட்ட வாக்குப்பதிவு தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில்’ சுரேஷ் ராணா, அதுல் கர்க், ஸ்ரீகாந்த் சர்மா, சந்தீப் சிங், அனில் சர்மா, கபில் தேவ் அகர்வால், தினேஷ் காடிக், டாக்டர் ஜி எஸ் தர்மேஷ் மற்றும் சவுத்ரி லக்ஷ்மி நரேன் ஆகிய அமைச்சர்களின் தேர்தல் விதி முடிவு செய்யப்படும்.
People queue up at Jain Inter College in Baghpat as they cast their votes for the first phase of #UttarPradeshElections pic.twitter.com/0bY5UNDIp0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 10, 2022
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, கடைசி சுற்று மார்ச் 7-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும்.
ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத்த நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காசியாபாத், புலந்த்ஷாஹர், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
2017 தேர்தலில், இந்த 58 இடங்களில் பாஜக 53 இடங்களையும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 2 இடங்களையும் பெற்றன. ஒரு இடம் ஆர்எல்டி-க்கு கிடைத்தது.
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் தொடங்கிய நிலையில், ஆக்ரா எஸ்பி விகாஷ் குமார் கூறியதாவது: காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவில் போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் தவிர, 129 கம்பெனி மத்திய படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய ஆயுத போலீஸ் படை பயன்படுத்தப்படாத எந்த ஒரு சாவடியும் மாவட்டத்தில் இல்லை என கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.