scorecardresearch

உ.பி.யில் அடுத்த என்கவுன்டர்; கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டுக் கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த என்கவுன்டரில் பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

UP gangster Anil Dujana killed in encounter in Meerut
மீரட்டில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் பிரபல ரவுடி அனில் துஜானா கொல்லப்பட்டார்.

உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் (STF) மீரட்டில் நடத்திய என்கவுன்டரில் பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா வியாழக்கிழமை (மே 04) கொல்லப்பட்டார் என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், துஜானா மீது 18 கொலை வழக்குகள் உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன என STF இன் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த 25 வழக்குகளில் கலவரம், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் 6 ஆகும்.

தொடர்ந்து, STF இன் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அமிதாப் யாஷ் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “அனில் துஜானா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டார். இவர் கூலிப் படையை சேர்ந்தவர்போல் செயல்பட்டுவந்தவர்” எனத் தெரிவித்தார்.

என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அனில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள துஜானா என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் அனில் சிங் என்பதாகும். எனினும் இவர் கிராமத்தின் பெயரால் அறியப்பட்டார்.

அனில் துஜானா, 2002 ஆம் ஆண்டு நொய்டாவில் உள்ள செக்டார்-8ல் ஒரு நபரைக் கொன்று, அவர் வைத்திருந்த 5.5 லட்சத்தை திருடினார்.
அதன் பின்னர் அவர் போலீசார் தேடும் குற்றவாளியாக மாறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Up gangster anil dujana killed in encounter in meerut