Lalmani Verma , Shyamlal Yadav , Sandeep Singh
UP government orders probe into Ayodhya land deals : இந்தியன் எக்ஸ்பிரஸ், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் உறவினர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அயோத்தியில் நிலம் வாங்கியது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதே நாளில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எம்.எல்.ஏ முதல் மேயர் வரை: ராமர் கோவில் தீர்ப்பிற்கு பிறகு அயோத்தியில் நிலம் வாங்கிய அதிகாரிகள்
வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் மனோஜ் குமார் சிங் இதனை உறுதி செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களுடன் அறிக்கையை தயார் செய்து அடுத்த ஒரு வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று முதல்வர் கூறியதாக அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பத்திரிகை செய்தியை கவனத்தில் எடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்புச் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
வருவாய்த்துறை சிறப்பு செயலாளர் ராதே ஷியாம் மிஸ்ரா இந்த விசாரணையை மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிலம் வாங்கிய தரவுகளை ஆய்வு செய்த போது குறைந்தது 15 மக்கள் பிரதிநிதிகள், அயோத்தியில் பணியாற்றும் / பணியாற்றிய அரசு அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் நில பரிவர்த்தனையின் உண்மை தரத்தை சோதனையிடும் உள்ளூர் வருவாய் அதிகாரிகள் பலரும் அயோத்தியில் நிலம் வாங்கியதை பட்டியலிட்டது.
தலித் கிராம மக்களிடம் இருந்து நிலம் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் மூன்று வழக்குகளில் விற்பனையாளரான மகரிஷி ராமாயண் வித்யாபீத் அறக்கட்டளை நிறுவனம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மூன்று பரிவர்த்தனைகள் நில உரிமை, மக்கள் பொதுநலன் குறித்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறாது.
இந்த மூன்று பரிவர்த்தனைகளில் எம்.பி. அகர்வால் (அயோத்தி டிவிஷ்னல் கமிஷ்னர் நவம்பர் 30, 2019 முதல்), புருஷோத்தம் தாஸ் குப்தா (அயோத்தியின் முதன்மை வருவாய் அதிகாரி (2018, ஜூலை 20 முதல் 2021 செப்டம்பர் 10 வரை), மற்றும் துணை காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் குமார் (2020 ஜூலை 26 முதல் 2021 மார்ச் 30 வரை) ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுள்ளது.
அறக்கட்டளையில் பணியாற்றும் ரோங்காய் என்ற தலித் நபர் உதவியுடன் 21 பிகாக்கள் (52 ஆயிரம் சதுர மீட்டர்) நிலத்தை தலித் குடும்பங்களிடம் இருந்து வெறும் 6.38 லட்சத்திற்கு வாங்கியுள்ளது MRVT அறக்கட்டளை. தற்போது இந்த நிலத்தின் மதிப்பானது ரூ. 4.25 கோடி முதல் 9.58 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் தலித் நிலங்களை சட்டவிரோதமாக வாங்கிய அறக்கட்டளை; அதிகாரிகளின் உறவினர்களுக்கு விற்பனை
அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய், அயோத்தி நகர எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, இப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள கோசைகஞ்ச் எம்எல்ஏ இந்திரா பிரதாப் திவாரி, அன்றைய மாவட்ட நீதிபதி அனுஜ் ஜா, மாநில தகவல் ஆணையர் ஹர்ஷ்வர்தன் ஷாஹி, ஓபிசி ஆணைய உறுப்பினர் பல்ராம் மவுரியா, முன்னாள் சப் டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் ஆயுஷ் சவுத்ரி. இப்போது மீரட்டில் இருக்கும் அரவிந்த் சௌராசியா(மாகாண போலீஸ் சேவை அதிகாரி) போன்ற அதிகாரிகளும் அவர்களின் உறவினர்களும் அங்கே நிலம் வாங்கியுள்ளனர். உபி கேடரின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உமாதர் திவேதி, கஞ்சா உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த கானூங்கோ சுதான்ஷு ரஞ்சன், கஞ்சா கிராமத்தின் லேக்பால் பத்ரி உபாத்யாய் மற்றும் இந்த அறக்கட்டளைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உதவிப் பதிவு அதிகாரி பான் சிங்கின் பேஷ்கர் தினேஷ் ஓஜா ஆகிய அரசு அதிகாரிகளும் அயோத்தியில் ராமர் கோவில் தீர்ப்பிற்கு பிறகு நிலம் வாங்கியுள்ளனர் என விசாரணையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அம்பலப்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.