ஒருபால் உறவு சம்பந்தமான வழக்குகளில் உத்திரபிரதேசம் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஓரினச்சேர்க்கை வழக்குகள்:
ஓரினச் சேர்க்கையை குற்றச்செயலாக வரையறுக்கும் அரசியல் சாசனத்தின் 377-வது பிரிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சாசனத்தின் 377-வது பிரிவு ஓரினச்சேர்க்கையை குற்றச்செயலாக வரையறுத்து, அதற்கு சிறை தண்டனை வழங்க வழி வகுத்தது. இந்தச் சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், ’’ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட உரிமையை இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ளது. சமுதாயத்தை விட தனி மனித சுதந்திரம் என்பது மிக முக்கியமானது. எனவே, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை’’ என்று கூறியுள்ளது.
இந்நிலையில் தேசிய குற்ற ஆவணப் பணியகம் ஒருபால் ஈர்ப்பு சம்பந்தமாக பதியப்பட்ட வழக்கு பட்டியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான இந்தக் குற்றப் பட்டியலில் உத்திரபிரதேசம்தான் முதல் இடத்தில் உள்ளது. 2016ல் மட்டும் 999 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2015ல் மட்டும் 239 வழக்குகள் பதியப்பட்டதை விட அதிகம். மேலும் கேரளாவில் 207 வழக்குகளும் டெல்லியில் 183, மஹாராஷ்டிராவில் 170 பதியப்பட்டுள்ளன. 2015ல் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் மட்டும் 159 கே செக்ஸ் சம்பந்தமான வழக்குகளும் ஹரியானா 111, பஞ்சாப் 81 வழக்குகளும் பதிவாகி உள்ளன.