நேற்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியப்போது ஏற்பட்ட வன்முறையால் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க இன்று (திங்கள்) காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றப்போது வழியில் தடுத்து நிறுத்தபட்டார். இதனையடுத்து அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
"இந்த அரசாங்கம் விவசாயிகளை வெட்டுவதற்கு அரசியலைப் பயன்படுத்துகிறது என்பதை இன்றைய சம்பவம் காட்டுகிறது. இது விவசாயிகளின் நாடு, பாஜகவினுடயது அல்ல ... பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்க முடிவு செய்ததை தவிர நான் எந்த குற்றமும் செய்யவில்லை ... நீங்கள் ஏன் எங்களை தடுக்கிறீர்கள்? நீங்கள் ஒரு வாரண்ட் வைத்திருக்க வேண்டும்,” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட பிறகு கூறினார்.
இதனிடையே சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னோவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்கு செல்வதற்கு போலீசார் அனுமதிக்காததை அடுத்து, அவர் மறியலில் ஈடுபட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, உத்திர பிரதேசம் லக்கிம்பூர் கேரியில், அம்மாநில துணை முதல்வர் வருகையின்போது எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான மூன்று எஸ்யூவிகளின் அணி, விவசாயிகள் மீது மோதிய சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து விவசாயிகள் மீது காரை மோதி தாக்கிய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரி திங்கள்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் "அமைச்சர் மற்றும் அவரது மகனைக் கைது செய்ய" கோரியுள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil