Advertisment

பா.ஜ.க- மோடி- யோகியை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்: உ.பி மாநில ஒரே முஸ்லிம் அமைச்சர் புகழாரம்

33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி அமைச்சராக பதவியேற்றதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவர் சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர். சன்னி முஸ்லிம் பிரிவு பொதுவாக அரசியல் ரீதியாக பிஜேபிக்கு எதிரானது என்று கருதப்படுகிறது.

author-image
WebDesk
New Update
பா.ஜ.க- மோடி- யோகியை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்: உ.பி மாநில ஒரே முஸ்லிம் அமைச்சர் புகழாரம்

இந்த வார தொடக்கத்தில், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பல மாதங்களாக தனது கட்சியான பாஜகவுக்காக தீவிரமாகப் பணியாற்றிய பிறகு முசோரியில் ஓய்வு எடுத்த ​​33 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி லக்னோவுக்கு திரும்பி வந்த பிறகு எந்தத் தகவலும் இல்லாமல், அவர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான புதிய ஆட்சியில் மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

Advertisment

ஆதித்யநாத் அரசாங்கம் 2.0-ல், முந்தைய அரசாங்கத்தில் ஒரே முஸ்லிம் அமைச்சராக இருந்த மொஹ்சின் ராசாவுக்குப் பதிலாக டேனிஷ் ஆசாத் அன்சாரி மட்டுமே முஸ்லிம் முகமாக உள்ளார்.

டேனிஷ் ஆசாத் அன்சாரி உத்தரப் பிரதேசத்தின் சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளராக உள்ளார். முந்தைய ஆதித்யநாத் அரசில் 2018 முதல் உருது மொழிக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

மொஹ்சின் ராசா மீதான புகார்கள் காரணமாக பாஜக இந்த முறை அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது, டேனிஷ் ஆசாத் அன்சாரி உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் அல்லது சட்ட மேலவையில் உறுப்பினராக இல்லை. அவரை சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்கு பாஜக பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேனிஷ் ஆசாத் அன்சாரி லக்னோ பல்கலைக்கழகத்தில் தர மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அங்கே 2011-ல், அவர் ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி) உறுப்பினராக மாணவர் அரசியலில் சேர்ந்தார். அவர் 2018 வரை ஏ.பி.வி.பி-ன் லக்னோ மகாநகர் பிரிவில் பல்வேறு நிறுவனப் பதவிகளை வகித்தார். அதைத் தொடர்ந்து அவர் பாஜகவுக்கு வந்தார்.

ஆதித்யநாத் அமைச்சரவையில் இணைவது குறித்து டேனிஷ் ஆசாத் அன்சாரி தி சண்டே எக்ஸ்பிரஸ் கேட்டபோது, ​​“யோகி ஜி மற்றும் மோடி ஜி எனக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கியுள்ளனர். இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் அதிகாரம் மற்றும் நலனுக்காக நான் உழைக்க வேண்டும்.” என்று கூறினார்.

டேனிஷ் ஆசாத் அன்சாரி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், டேனிஷ் ஆசாத் அன்சாரி பொதுவாக பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்ப்பதாகக் கருதப்படும் முஸ்லிம் சமூகத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்.

மொஹ்சின் ராசா முஸ்லிம்களின் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். ஷியா பிரிவு ஒப்பீட்டளவில் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. உதாரணமாக, லக்னோவில் ஷியா முஸ்லிம் வாக்குகளை பாஜக பெறும் என்று கூறப்படுகிறது.

“டேனிஷ் ஆசாத் அன்சாரி ஒரு ஓபிசி முஸ்லிம். அவரை புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதன் மூலம், ஓபிசி முஸ்லிம் வாக்காளர்களைச் சென்றடைய கட்சி முயற்சித்துள்ளது” என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.

டேனிஷ் ஆசாத் அன்சாரி தரப்பில் கூறுகையில், “அந்த (சன்னி முஸ்லிம்களின்) கருத்து மாறிவிட்டது. யோகி அரசு முஸ்லிம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கான பணிகளை திறம்பட செய்துள்ளது. ரேஷன், வீடுகள், ஆயுஷ்மான் அட்டைக்கான திட்டங்கள் மூலம் அனைத்து பிரிவினரும் பயனடைந்துள்ளன. முஸ்லிம்களும் அதை புரிந்து கொண்டு பாஜக, யோகி மற்றும் மோடியை நேசிக்கிறார்கள்.” என்று கூறினர்.

சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், 10 சதவீத முஸ்லிம் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறினார். கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்திய உத்தரப் பிரதேசம் மற்றும் புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம்கள் மத்தியில் டேனிஷ் ஆசாத் அன்சாரி பிரச்சாரம் செய்தார்.

பாஜகவுக்கு பிரச்சாரம் செய்யும் போது அவர் களத்தில் சவால்களை எதிர்கொண்டாரா என்ற கேள்விக்கு பதிலளித்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, “சாதாரண முஸ்லிம்கள் என்னை எதிர்க்கவில்லை. மற்ற கட்சியுடன் தொடர்புள்ளவர்களும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மனநிலை கொண்டவர்களும் என்னை எதிர்க்கிறார்கள். சாமானிய முஸ்லிம்கள் பாஜகவின் பணியை விரும்புகிறார்கள்.” என்று கூறினார்.

டேனிஷ் ஆசாத் அன்சாரி பல்லியாவைச் சேர்ந்தவர். அங்கே அவருடைய தந்தை நெசவாளராக ஒரு புடவைக் கடை நடத்துகிறார். அவருடைய தாயார் பள்ளி முதல்வராக உள்ளார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் டேனிஷ் ஆசாத் அன்சாரியின் சீனியராக இருந்த தயாசங்கர் சிங் அமைச்சராக (சுயேச்சை பொறுப்பு) பதவியேற்றார். இவர் டேனிஷ் ஆசாத் அன்சாரி அவருடைய பல்லியா நகர் தொகுதியில் தயாசங்கர் சிங்குக்காக பிரச்சாரம் செய்தார்.

டேனிஷ் ஆசாத் அன்சாரி அமைச்சராக பதவியேற்ற போது, ​​பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத் மேடையில் இருந்தனர். அவர் அவர்களை சந்திப்பது இது முதல் முறை அல்ல. மேடையில் நாற்காலிகள் வைப்பது, கூடாரம் போடுவது போன்ற ஏற்பாடுகளைச் செய்கிற கட்சித் தொண்டராக இரு தலைவர்களையும் முன்பு சந்தித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Uttar Pradesh Modi Muslim Yogi Adityanath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment