உத்தரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், அமைச்சர் சுவாமி பிரசாத் மயூரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இருந்தும் விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
403 தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியைத் தக்க பாஜக தீவிர தேர்தல் பரபரப்புரையில் பல மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் களத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சுவாமி பிரசாத் மயூரா திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இருந்தும் விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்துள்ளார்.
அவர் ராஜினாமா கடித்ததில், "தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீதான அரசின் அலட்சிய மனப்பான்மை தான் பதவி விலகும் முடிவிற்குக் காரணம்" என்று பட்டியலிட்டுள்ளார்.
உ.பி.,யில் பாஜக மிகப்பெரிய பரப்புரையை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தின் சாதனைகளை கட்சித் தொண்டர்கள் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர்.
அதேபோல், டிஜிட்டல் பரப்புரையை கையிலெடுக்கும் பாஜக, ஜனவரி 14 முதல், கடந்த ஐந்தாண்டுகளில் என்ன செய்திருக்கிறது என்பதை வாக்காளர்களுக்குத் தெரிவிக்க, பெரிய திரைகள் பொருத்தப்பட்ட வேன்களை அனைத்து தொகுதிகளிலும் பயணிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளதுகுறிபபிட்டத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil