scorecardresearch

உ.பி அமைச்சர், தலித் தலைவர் தினேஷ் காதிக்; பெரிய பதவிக்கு குறி!

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குப் பதிலாக அமித் ஷாவுக்கு எழுதிய கடிதம் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த அமைச்சர் தினேஷ் காதிக்; ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மற்றும் தலித் பின்னணி கொண்டவர் பெரிய பதவிக்கு குறி!

உ.பி அமைச்சர், தலித் தலைவர் தினேஷ் காதிக்; பெரிய பதவிக்கு குறி!

Maulshree Seth

UP MoS and Dalit leader Dinesh Khatik, who rose from RSS, BJP ranks, eyed ‘larger role’: உத்தரப் பிரதேச மாநில ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் தினேஷ் காதிக், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குப் பதிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதம் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். வைரலாக பரவிய அந்தக் கடிதத்தில், தினேஷ் காதிக் தனது அமைச்சகத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், தலித் அடையாளம் காரணமாக அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தினேஷ் காதிக்கின் ராஜினாமா கடிதம் தங்களுக்கு கிடைத்ததாக ராஜ் பவனில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்தாலும், புதன்கிழமை இரவு வரை அவரது ராஜினாமா குறித்து அரசாங்கம் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படியுங்கள்: முகமது ஜுபைருக்கு ஜாமீன்..உ.பி விசாரணை குழு கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

மீரட்டின் ஹஸ்தினாபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 45 வயதான தினேஷ் காதிக், மேற்கு உ.பி.யில் உள்ள பா.ஜ.க.,வின் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவர். தொடர்ந்து இரண்டாவது முறையாக மார்ச் மாதம் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ஆதித்யநாத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட எட்டு தலித் முகங்களில் இவரும் ஒருவர்.

அவரது தந்தையைப் போலவே தினேஷ் காதிக்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பு கொண்டிருந்தார். அரசியலில் அவரது எழுச்சி குறிப்பிடத்தக்கது. உ.பி.,யில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஹஸ்தினாபூர் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தினேஷ் காதிக். அடுத்தடுத்த ஆண்டுகளில், உள்ளூர் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லி, பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களைத் தனது பகுதிக்கு கொண்டுவந்ததன் மூலம் மீரட் அரசியலில் தனது இடத்தைப் பிடித்தார்.

இது அவரது செல்வாக்கை உயர்த்தியது, எனவே பிப்ரவரி-மார்ச் 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆதித்யநாத் தனது அமைச்சரவை விரிவாக்கத்தை மேற்கொண்டபோது, ​​புதியவர் ஜிதின் பிரசாதா உட்பட மற்றவர்களுடன் தினேஷ் காதிக்கை அமைச்சராக நியமித்தார். தினேஷ் காதிக்கின் முதல் அமைச்சர் பொறுப்பு முக்கியமானது, அவருக்கு ஜல் சக்தித் துறை இணை அமைச்சர் இலாகா ஒதுக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக ஆதித்யநாத் ஆட்சிக்கு எதிராக தினேஷ் காதிக் கொந்தளித்து வருவதாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு மீரட்டின் கங்காநகர் காவல் நிலையத்திற்குச் சென்ற தினேஷ் காதிக், உள்ளூர் இளைஞரை தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாவிட்டால், அங்கு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினரை எச்சரித்தபோது, ​​அரசாங்கத்தின் மீதான அவரது வெறுப்பு வெளிப்பட்டது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட போலீசார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பா.ஜ.க தலைமை துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை மீரட்டுக்கு அனுப்பி தினேஷ் காதிக்கை சமாதானப்படுத்தவும், அவரது கோரிக்கைகள் கேட்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினேஷ் காதிக் முதல் முறையாக இணை அமைச்சர் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மீரட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டையும் எதிர்கொண்டார். இது தொடர்பாக சில வழக்கறிஞர்கள் பிப்ரவரி 2021 இல் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், தினேஷ் காதிக் மீரட் பகுதியில் பிரபலமான தலைவராக இருந்து வருகிறார், உ.பி.யில் அவரை ஒரு முக்கிய தலித் முகமாக வளர்க்க முடியும் என பா.ஜ.க நம்புகிறது. 2017 மற்றும் 2022 தேர்தல்களில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவை தோற்கடித்து, குஜ்ஜர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஹஸ்தினாபூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்றவர் தினேஷ் காதிக்.

அவரது ஆர்.எஸ்.எஸ் பின்னணியைத் தவிர, தினேஷ் காதிக் பா.ஜ.க.,வின் தொண்டராக இருந்து உயர்ந்தவர் என்று அறியப்படுகிறது. பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர் ஒரு “பெரிய பாத்திரத்தை” எதிர்பார்த்தார் என்றும், அவருக்கும் மாநில பா.ஜ.க தலைவராகவும் ஜல் சக்தித்துறை கேபினட் அமைச்சராகவும் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு இல்லாதது, ஆகியவை தற்போதைய நிகழ்வுகளுக்கு காரணம் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்திய மற்றும் மாநில அளவில் கட்சித் தலைமையிடம் தினேஷ் காதிக் தனது அதிருப்தியை தெளிவுபடுத்தியதாகவும், உரிய தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகின்றன, இருப்பினும் இவை எதுவும் பலனளிக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Up mos dalit leader dinesh khatik rss bjp larger role