Advertisment

Election Results Highlights: ஏழைகளுக்கு உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

Election Results 2022 Today Live Updates, Uttar Pradesh (UP), Uttarakhand (UK), Manipur, Goa, Punjab Polls Results Live News: 5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Election Results Highlights: ஏழைகளுக்கு உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

5 states Assembly election results 2022 live : பஞ்சாப், கோவா, உ.பி., உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இன்று (10/03/2022) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. பஞ்சாப், கோவாவில் மாற்றத்தை ஏற்படுத்த ஆம் ஆத்மி முயன்று வருகின்ற நிலையில் டெல்லி மாடலும், சமீபத்திய சண்டிகர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இந்த இரண்டு மாநிலங்களிலும் கை கொடுத்துள்ளதா என்பதை இன்றைய முடிவுகள் தீர்மானிக்கும்.

Advertisment

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்; யார் பக்கம் நிற்கின்றனர் மக்கள்?

UP Election Results

பசு பாதுகாப்பு, ராமர் கோவில், கோவில் கட்ட வாங்கப்பட்ட நிலத்தில் மோசடி, மாட்டிறைச்சி விவகாரம், சி.ஏ.ஏ. லக்கீம்பூர் கேரி விபத்து, கரும்பு விவசாயம் செய்யும் ஜாட் மக்களை போராட்டத்திற்குள் தள்ளிய விவசாய சட்டங்கள் என்று பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பாஜகவின் கோட்டை என்று அழைக்கப்படும் உ.பியில் பாஜக மீண்டும் வெற்றி பெறுமா அல்லது சமாஜ்வாடி கூட்டணியிடம் மண்டியிடுமா என்பதையும், இந்த தேர்தலில் காங்கிரஸ் கணிசமான அளவிலாவது வாக்குகளை பெற்றுள்ளதா என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.

Punjab Election Results

விவசாயிகள் போராட்டம், விவசாய சட்டங்களை திரும்பிப் பெற்ற நிகழ்வு, பிரதமரின் கான்வாயை பாலத்தில் நிற்க வைத்து அவரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய பொதுமக்கள், தேர்தலுக்கு வெகு சில மாதங்களே இருந்த நிலையில் பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங், முதல் தலித் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என்று பல்வேறு திருப்புமுனைகளை அடுத்தடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த விவசாய பெருங்குடிகளை அதிகம் கொண்ட பஞ்சாப் மாநில மக்கள் மனதில் வெற்றி பெற்றது யார் என்பதையும் கணிக்க உள்ளது இந்த தேர்தல் முடிவுகள் .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 22:32 (IST) 10 Mar 2022
  உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரில் பெரும்பான்மை பெற்ற பாஜக

  உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மையை பெற்றுள்ளது.. இதுவரை உத்தரகாண்டில் உள்ள 70 இடங்களில் 46 இடங்களையும், மணிப்பூர் சட்டசபையில் உள்ள 60 இடங்களில் 32 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. • 22:31 (IST) 10 Mar 2022
  மத்திய அமைச்சர் எஸ்பி சிங் பாகேலை வீழ்த்திய அகிலேஷ் யாதவ்

  உ.பி., சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியில், பாஜகவை சேர்ந்த் மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேலை, 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். • 22:30 (IST) 10 Mar 2022
  சித்து, மஜிதியாவை வீழ்த்திய 'பட்வுமன்'

  பஞ்சாப் சட்டசபை தேர்தலில், காங்கிரஸின் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அகாலி தளத்தின் பிக்ரம் சிங் மஜிதியா இடையேயான போட்டியில், அமிர்தசரஸ் கிழக்கில் யாரும் யாரும் எதிர்பார்ககாத வெற்றியை பதிவு செய்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் ஜீவன் ஜோத். மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களை ஊக்குவிப்பதற்காக 'பேட்வுமன்' என்று அழைக்கப்படும் இவர், இதுவரை தோல்வியை சந்திக்காத இரண்டு வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில், சித்துவுக்கு 32,807 வாக்குகளும், மஜிதியாவுக்கு 25,112 வாக்குகளும் பெற்ற நிலையல், 'பேட்வுமன்' 39,520 வாக்குகள் பெற்றார். • 21:02 (IST) 10 Mar 2022
  ஏழைகளுக்கு உரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டேன்: மோடி

  5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய பிரதமர் மோடி ஏழைகள் தங்கள் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓயப் போவதில்லை; ஒவ்வொரு ஏழைகளையும், நன்மைகளுக்கு உரியவர்களையும் சென்றடைவோம்" என்று கூறியுள்ளார். • 21:01 (IST) 10 Mar 2022
  ஜனநாயகம் நம் நரம்புகளில் ஓடுகிறது என்பதை வாக்காளர்கள் நிரூபித்துள்ளனர்: மோடி

  5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜகவை நம்பியதன் மூலம், வாக்காளர்கள் அவர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் என்பதையும், ஜனநாயகம் நமது நரம்புகளில் ஓடுகிறது என்பதையும் காட்டியுள்ளனர்” என்று பிரதமர் மோடி கூறினார். • 21:00 (IST) 10 Mar 2022
  ஊழலுக்கு எதிராக நாங்கள் செயல்படும்போது அழுத்தம் கொடுக்கிறார்கள் - பிரதமர் மோடி

  5 மாநில் தேர்தல் முடிவு குறித்து பேசிய பிரதமர் மோடி, "ஊழலை ஒழிக்க வேண்டுமா, வேண்டாமா? ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா? 2014ல், தூய்மையான ஆட்சியை நாங்கள் வழங்கினோம். அதே வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற வேண்டுமா, வேண்டாமா?" என்று மோடி கேள்வி எழுப்பினார்.

  ஆனால், ஊழல்வாதிகளுக்கு எதிராக நாம் செயல்படும்போது, ​​சில நபர்களும் அவர்களின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல்அமைப்பும் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கவும், அவதூறு செய்யவும் முயற்சி செய்கின்றனர். ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம், மதம், பிராந்தியம் அல்லது சாதியை பயன்படுத்துகிறார்கள்

  எனவே தங்கள் மதம் அல்லது ஜாதியின் மீது உண்மையான பெருமை கொண்ட ஒவ்வொருவரையும் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று மோடி கூறினார். • 20:43 (IST) 10 Mar 2022
  35 ஆண்டுகளில் முதன்முறையாக, உ.பி.யில் ஒரு கட்சி 2வது முறையாக பதவி ஏற்க உள்ளது: ஜே.பி. நட்டா

  உத்திரபிரதேசத்தில், 35 ஆண்டுகளில் ஒரு கட்சி இரண்டாவது முறையாக பதவியேற்றது இதுவே முதல் முறையாகும். உத்தரகாண்டிலும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி அரசுகள் வந்தன, ஆனால் இப்போது முதல் முறையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார். • 20:03 (IST) 10 Mar 2022
  35 ஆண்டுகளில் முதன்முறையாக, உ.பி.யில் ஒரு கட்சி 2வது முறையாக பதவி ஏற்க உள்ளது: ஜே.பி. நட்டா

  உத்திரபிரதேசத்தில், 35 ஆண்டுகளில் ஒரு கட்சி இரண்டாவது முறையாக பதவியேற்றது இதுவே முதல் முறையாகும். உத்தரகாண்டிலும் ஒவ்வொரு முறையும் மாறி மாறி அரசுகள் வந்தன, ஆனால் இப்போது முதல் முறையாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார். • 20:01 (IST) 10 Mar 2022
  5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் கொள்கைகளுக்கு ஒப்புதல் முத்திரை: ஜேபி நட்டா

  5 மாநில தேர்தல் முடிவு குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், 5 மாநிலசட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கட்சியின் கொள்கைகளுக்கு ஒப்புதல் முத்திரை. இது குறித்து "மதிப்பிற்குரிய பிரதமரின் தலைமைக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். முடிவுகள் பல முதல்நிலைகளையும், தேசத்தின் அரசியலைப் பற்றிய சில குறிப்புகளையும் கொடுக்கின்றன. 2014, 2017 மற்றும் 2019க்குப் பிறகு, இப்போது நான்காவது முறையாக உ.பி. மக்கள் மீண்டும் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். • 19:42 (IST) 10 Mar 2022
  வெற்றிபெற வேண்டுமானால் மாற்றம் வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்

  ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர், "ஒரு விஷயம் தெளிவாக உள்ளது - நாம் வெற்றிபெற வேண்டுமானால் மாற்றம் தவிர்க்க முடியாதது" “சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் காங்கிரசை நம்பும் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  காங்கிரஸுக்கு ஆதரவாக நிற்கும் இந்தியா மற்றும் தேசத்திற்கு வழங்கும் நேர்மறையான நிகழ்ச்சி நிரலை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது. மேலும் நாம் வெற்றியை ஈட்டவேணடும் என்றால் மீண்டும் எழுப்பி மக்களை ஊக்குவிக்கும் வகையில் நமது கட்சியின் தலைமையை சீர்திருத்த வேண்டும் என்று கூறியுள்ளார். • 18:22 (IST) 10 Mar 2022
  தேர்தல் முடிவுகள் நிலவரம்: பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றும் ஆம் ஆத்மி; உ.பி.யில் மீண்டும் பாஜக

  பஞ்சாப்பில் காங்கிரஸிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) ஆட்சியைக் கைப்பற்றும் அதே வேளையில், உத்தரப் பிரதேசத்தில் அதிகப் பெரும்பான்மையுடன் பாஜக இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று இதுவரையிலான போக்குகள் தெரிவிக்கின்றன. உ.பி.யில் பாஜக 265க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி இதுவரை பஞ்சாபில் 87 தொகுதிகளிலும், 5ல் முன்னிலையிலும் உள்ளது. கோவாவில் 40 இடங்களில் பாஜக ஏற்கனவே 20 இடங்களிலும், உத்தரகாண்டில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. உத்தரக்காண்ட் மாநில காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரான ஹரிஷ் ராவத் பாஜகவின் மோகன் சிங் பிஷ்டிடம் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் லால்குவானிடம் தோற்றார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்று 11 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய முதல்வர் என் பைரன் சிங் ஹெய்ங்காங் தொகுதியில் வெற்றி பெற்றார். • 17:56 (IST) 10 Mar 2022
  உத்தரப் பிரதேசம்: கோரக்பூர் தொகுதியில் ஆதித்யநாத் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

  உ.பி.யின் கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியின் சுபாவதி உபேந்திர தத் சுக்லாவை எதிர்த்து 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். • 17:55 (IST) 10 Mar 2022
  கோவாவில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி

  கோவாவில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. • 17:43 (IST) 10 Mar 2022
  கோவா சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களாக நுழையும் நுழைய 3 தம்பதிகள்

  ேர்தலுக்குப் பிறகு அமைய உள்ள புதிய கோவா சட்டமன்றத்தில், உள்ள 40 உறுப்பினர்களில், இந்த முறை மூன்று ஜோடி கணவன்-மனைவி தம்பதிகள் இடம்பெற உள்ளனர். பாஜக ஆட்சியில் சுகாதார அமைச்சரான விஸ்வஜித் ரானே மற்றும் அவரது மனைவி திவியா ஆகியோர் முறையே வால்போய் மற்றும் போரியம் சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸின் மைக்கேல் லோபோ தனது பாரம்பரிய சட்டமன்றத் தொகுதியான கலங்குட் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் அவருடைய மனைவி டெலிலா சியோலிம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றார். பாஜகவின் அடானாசியோ மான்செராட்டே பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிஃபர் தலீகாவோ தொகுதியிலும் பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. • 17:08 (IST) 10 Mar 2022
  பஞ்சாப்: காங்கிரசுக்கு பின்னடைவு; முதல்வர் சன்னி 2 தொகுதிகளிலும் தோல்வி

  பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) எதிராக சம்கவுர் சாஹிப் மற்றும் பதவுர் ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சன்னியை சம்கவுர் சாஹிப்பில் தோற்கடித்தார், அதேசமயம் சன்னி பதாவுர் தொகுதியில் சிங் உகோக்கிடம் தோல்வியடைந்தார். • 16:53 (IST) 10 Mar 2022
  மொஹாலியில் 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி

  மொஹாலியில் உள்ள 3 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மியின் குல்வந்த் சிங் மொஹாலியிலும், குல்ஜீத் ரந்தாவா டெராபஸ்ஸியிலும், அன்மோல் ககன் மான் கரார் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். • 16:52 (IST) 10 Mar 2022
  காங்கிரஸ் தோல்வி: 'கேப்டன் அமரீந்தர் சிங்கின் கீழ் 4.5 ஆண்டுகள் பதவிக்கு எதிரான போக்கை சமாளிக்க முடியவில்லை

  காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், மண்ணின் மைந்தரான சரண்ஜித் சிங் சன்னி மூலம் காங்கிரஸ் புதிய தலைமையை வழங்கியபோதும், கேப்டன் அமரீந்தர் சிங்கின் கீழ் 4.5 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான போக்கை வெல்ல முடியவில்லை. எனவே, மக்கள் மாற்றத்திற்காக ஆம் ஆத்மிக்கு வாக்களித்தனர். • 16:15 (IST) 10 Mar 2022
  ஆம் ஆத்மி கட்சியின் குர்மீத் சிங் குடியன் லாம்பி தொகுதியில் வெற்றி

  ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மீத் சிங் குடியன், முகத்சார் லாம்பி தொகுதியில் வெற்றி பெற்றார்.

  ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மீத் சிங் குடியன், முகத்சார் லாம்பி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் சிங் பாதலை தோற்கடித்தார். • 15:58 (IST) 10 Mar 2022
  தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ளும் - ராகுல் காந்தி

  மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தோல்வியிலிருந்து பாடம் கற்று, இந்திய மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். • 15:33 (IST) 10 Mar 2022
  கெஜ்ரிவால் உண்மையான ‘தேச பக்தர்’

  இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, உண்மையான ‘தேச பக்தர்’ என்பதை மக்கள் காட்டியுள்ளனர் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். • 15:13 (IST) 10 Mar 2022
  மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் வெற்றி

  மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், ஹெய்ன்கேங் தொகுதியில் வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளரை 18,271 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். • 15:05 (IST) 10 Mar 2022
  பகத் சிங் கிராமத்தில் முதல்வராக பதவியேற்பேன் - பகத் சிங்

  பஞ்சாப் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்க மாட்டேன். பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர்காலனில் பதவியேற்பேன் என ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மன் தெரிவித்துள்ளார். • 14:57 (IST) 10 Mar 2022
  கோவாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்கிறது பாஜக

  40 தொகுதிகளை கொண்ட கோவாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கிறது . 20 இடங்களில் முன்னிலை பெற்ற பாஜகவுக்கு 3 சுயேட்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். • 14:54 (IST) 10 Mar 2022
  இந்தியாவின் தற்போதைய அரசியல் வரைபடம்

  இந்தியாவின் தற்போதைய அரசியல் வரைபடத்தை கீழே காணுங்கள் • 14:51 (IST) 10 Mar 2022
  வரலாற்றை மாற்றிய யோகி ஆதித்யநாத்

  உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் நிலையில், ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும் முதல் முதல்வர் என்ற வரலாற்று பெருமை யோகி ஆதித்யநாத் கிடைத்திடும. 1985க்குப் பிறகு உ.பி.யில் ஒரு கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். • 14:49 (IST) 10 Mar 2022
  பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி

  117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி. 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், 89ல் முன்னிலை வகிக்கிறது. • 14:48 (IST) 10 Mar 2022
  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்?

  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்? ஏன் இந்த மாற்றங்களை மக்கள் தேர்வு செய்தனர்? இந்தியன் எக்ஸ்பிரஸுடன் இணைந்து தங்களின் கருத்துகளையும் முடிவுகளையும் தெரிவிக்கின்றனர் துறைசார் வல்லுநர்கள்... • 14:42 (IST) 10 Mar 2022
  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்?

  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்? ஏன் இந்த மாற்றங்களை மக்கள் தேர்வு செய்தனர்? இந்தியன் எக்ஸ்பிரஸுடன் இணைந்து தங்களின் கருத்துகளையும் முடிவுகளையும் தெரிவிக்கின்றனர் துறைசார் வல்லுநர்கள்... • 14:41 (IST) 10 Mar 2022
  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்?

  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்? ஏன் இந்த மாற்றங்களை மக்கள் தேர்வு செய்தனர்? இந்தியன் எக்ஸ்பிரஸுடன் இணைந்து தங்களின் கருத்துகளையும் முடிவுகளையும் தெரிவிக்கின்றனர் துறைசார் வல்லுநர்கள்... • 13:23 (IST) 10 Mar 2022
  மோகாவில் முன்னிலை பெரும் ஆம் ஆத்மி; காங்கிரஸ் இரண்டாம் இடம்

  12 சுற்றுகள் நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில் மோகாவின் எம்.எல்.ஏ. ஹர்ஜோத் கமல் நான்காம் இடம் பிடித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து பாஜகவிற்கு தாவியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆம் ஆத்மியின் அமந்தீப் கௌர் அரோரா முன்னிலை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மால்விகா சூட் இரண்டாம் இடத்தில் உள்ளார். • 13:04 (IST) 10 Mar 2022
  உ.பியில் துணை முதல்வருக்கு பின்னடைவு

  சீரத்து தொகுதியில் போட்டியிட்ட கேஷவ் பிரசாத் மௌரியா 3 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். • 13:01 (IST) 10 Mar 2022
  மணிப்பூர் தேர்தல் - துணை முதல்வருக்கு பின்னடைவு

  தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மணிப்பூர் துணை முதல்வர் ஜோகுமார் தற்போது உரிபோக் தொகுதியில் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ரகுமணி தொடர்ந்து முன்னிலை • 12:49 (IST) 10 Mar 2022
  காங்கிரஸிற்கு மாற்றாக ஆம் ஆத்மி இடம் பிடிக்கும் -ராகவ் சத்தா

  பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ராகவ் சத்தா ”காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிக்கு மாற்றாக செயல்படும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். • 12:43 (IST) 10 Mar 2022
  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்?

  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; மக்கள் யார் பக்கம்? ஏன் இந்த மாற்றங்களை மக்கள் தேர்வு செய்தனர்? இந்தியன் எக்ஸ்பிரஸுடன் இணைந்து தங்களின் கருத்துகளையும் முடிவுகளையும் தெரிவிக்கின்றனர் துறைசார் வல்லுநர்கள்... • 12:15 (IST) 10 Mar 2022
  முன்னிலை பெறும் அகிலேஷ் யாதவ்

  காலை 11.53 மணி நிலவரப்படி அகிலேஷ் யாதவ் தன்னுடைய தொகுதியில் 25,263 வாக்குகள் முன்னிலை பெற்று களத்தில் வெற்றி வேட்பாளராக உள்ளார். • 11:50 (IST) 10 Mar 2022
  பாஜக அலுவலகங்களில் துவங்கியது கொண்டாட்டம்

  தற்போது உ.பி. தேர்தலில் 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில் அக்கட்சியினர் பாஜக அலுவலகங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  uttarpradeshelections | Celebrations have already started the uttarpradesh State BJP office as the BJP leads comfortably ahead of SP and BSP with 260+ seats. 📸: Vishal Srivastav  LIVE: https://t.co/sXOt4ECvUj pic.twitter.com/GmNKSRzF5Z

  — The Indian Express (@IndianExpress) March 10, 2022


 • 11:27 (IST) 10 Mar 2022
  11 மணி நிலவரம்

  காலை 11 மணி நிலவரப்படி பஞ்சாப்பின் 117 தொகுதிகளில் 89 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. • 11:24 (IST) 10 Mar 2022
  ஆம் ஆத்மி ஜீவன் ஜோதி கௌர் தொடர்ந்து முன்னிலை

  நவ்ஜித் சிங் சித்து மற்றும் பிக்ரம் சிங் மஜிதியாவைக் காட்டிலும் ஆம் ஆத்மியின் ஜீவன் ஜோதி 2962 வாக்குகள் அதிகம் பெற்று அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். • 10:50 (IST) 10 Mar 2022
  வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கிய உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர்

  உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஸ்த்தை காட்டிலும் 2,713 வாக்குகள் பின்தங்கியுள்ளார். • 10:48 (IST) 10 Mar 2022
  வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கிய கோவா முதல்வர்

  கோவாவில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அந்த மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் போட்டியிட்ட தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட குறைந்த வாக்குகளை பெற்று பின்தங்கியுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. • 10:46 (IST) 10 Mar 2022
  கோவாவில் 20 இடங்களில் பாஜக முன்னிலை

  கோவாவில் 20 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. • 10:45 (IST) 10 Mar 2022
  கோவா: வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு

  கோவாவில் 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பு அறையில் இருந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி குணால் கண்காணித்து வருகிறார். • 10:36 (IST) 10 Mar 2022
  மணிப்பூர் முதல்வர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை

  ஹீன்ஹங் தொகுதியல் மணிப்பூர் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான பைரேன் சிங் முன்னிலை வகிக்கிறார். • 10:34 (IST) 10 Mar 2022
  உத்தரகாண்ட்டிலும் பாஜக முன்னிலை

  உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 19 இடங்களிலும், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. • 10:29 (IST) 10 Mar 2022
  ஓபிசி தலைவர் தரம் சிங் சைனி முன்னிலை

  உத்தரப் பிரதேச மாநிலம், நாகுரில் ஓபிசி தலைவர் தரம் சிங் சைனி 5,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இவர் தேர்தலுக்கு முன் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். • 10:29 (IST) 10 Mar 2022
  ஓபிசி தலைவர் தரம் சிங் சைனி முன்னிலை

  உத்தரப் பிரதேச மாநிலம், நாகுரில் ஓபிசி தலைவர் தரம் சிங் சைனி 5,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இவர் தேர்தலுக்கு முன் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். • 10:17 (IST) 10 Mar 2022
  உ.பி. அமைச்சர் பிரஜேஷ் முன்னிலை

  உத்தரப் பிரதேச அமைச்சரும், முக்கியத் தலைவருமான பிரஜேஷ் பதக் லக்னெள கன்டோன்மென்ட் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். • 10:07 (IST) 10 Mar 2022
  சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் முன்னிலை

  உத்தரப் பிரதேச மாநிலம், கர்ஹல் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் உள்ளார். • 10:02 (IST) 10 Mar 2022
  தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை

  உத்தரப் பிரதேசத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகிக்கிறது. • 09:59 (IST) 10 Mar 2022
  209 இடங்களில் பாஜக முன்னிலை

  உத்தரப் பிரதேசத்தில் 209 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. • 09:41 (IST) 10 Mar 2022
  ஓபிசி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா முன்னிலை

  உத்தரப் பிரதேசத்தில் தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சிக்கு மாறிய ஓபிசி தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா, ஃபாசில்நகரில் முன்னணியில் உள்ளார். • 09:01 (IST) 10 Mar 2022
  பகுஜன் சமாஜுக்கு பின்னடைவு

  403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி - 104, சமாஜ்வாதி கூட்டணி - 68, பகுஜன் - 2, மற்றவை - ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. • 08:56 (IST) 10 Mar 2022
  பஞ்சாபில் காங்., முன்னிலை

  உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜகவும், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகிறது. • 08:56 (IST) 10 Mar 2022
  பஞ்சாபில் காங்., முன்னிலை

  உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜகவும், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகிறது. • 08:20 (IST) 10 Mar 2022
  உ.பி.யில் பாஜக முன்னிலை

  உத்தரப் பிரதேசத்தில் பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பஞ்சாபில் காங்கிரஸ் 1 தொகுதியிலும், உத்தரகாண்டில் பாஜக 3, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. • 07:47 (IST) 10 Mar 2022
  இன்று 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

  5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. • 07:47 (IST) 10 Mar 2022
  இன்று 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

  5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. • 22:43 (IST) 09 Mar 2022
  நாங்கள் 300 இடங்களில் வெற்றி பெறுவோம் - அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

  403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில பதிவான வாக்குக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

  இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால், கருத்துக் கணிப்பு முடிவுகள் முக்கியமில்லை, நாங்கள் 300 இடங்களுக்கு மேல் பெறுவோம் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். • 21:21 (IST) 09 Mar 2022
  உத்திரபிரதேச சட்டசபை தேர்தல் : பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு

  உத்திரபிரதேசத்தில் 403- தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்புகளின்படி பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகக்கு 250 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்றும். சமாஜ்வடி கூட்டணிக்கு 145-முதல் 150 இடங்கள் வரை வெற்றி கிடைக்கும் எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.Live Updates Goa Uttar Pradesh Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment