UP teacher qualification exam topper didn't know the name of president
UP teacher qualification exam topper didn't know the name of president : இப்போதெல்லாம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் என்றாலே அதன் பின்னால் என்ன ஊழல் இருக்க போகிறதோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. உ.பி. மாநிலம் பிரக்யாராஜ் பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திர படேல். உதவி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் இவர் 95% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருக்கிறார்.
சமீபத்தில், ஆசிரியர் பணியில் சேர்த்துவிடுகின்றேன் என்று கூறி பலரிடம் லட்சகக்கணக்கில் பணம் பறித்துள்ளது ஒரு கும்பல். அது தொடர்பாக 9 நபர்களை கைது செய்தது உ.பி. காவல்துறை. அதில் தர்மேந்திர படேலும் ஒருவர்.
Advertisment
Advertisements
இவர்களை விசாரித்த காவல்துறையினர் “பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கும் கூட இவர்களால் பதில் கூற இயலவில்லை. இவர்களுக்கே ஒன்றும் தெரியாத போது இவர்கள் எப்படி மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர முடியும். இந்திய குடியரசு தலைவரின் பெயரை கேட்டால் அதற்கு அவரிடம் பதிலே இல்லை” என்று கூறியுள்ளனர்.
69 ஆயிரம் ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் தர்மேந்திர படேல் முதலிடம் பிடித்தார். தற்போது மொத்தமாக பணி நியமன முறையை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. நியமனத்தில் நடைபெற்ற ஊழலை கண்டுபிடிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தனிப்படை விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரியர் பணியில் சேர்க்க தன்னிடம் லஞ்சம் பெறப்பட்டது என்று ராகுல் என்பவர் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்ற போது தான் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil