எதிர்கட்சி தலைவர்கள் மீதான சிபிஐ விசாரணை; பா.ஜ.க ஆட்சியில் 95 %ஆக உயர்வு

எதிர்கட்சி தலைவர்கள் மீது நடத்தப்பட்ட சிபிஐ விசாரணைகளின் சதவிகிதம் 95% ஆக பாஜக ஆட்சியில் உயர்ந்துள்ளது என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் இது 60% இருந்தது குறிப்பிடதக்கது.

author-image
WebDesk
New Update

Advertisment

பாஜக ஆட்சியில் உள்ள இந்த 8 வருடங்களில் 124  முக்கிய அரசியல் தலைவர்கள் சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். இதில் 118 பேர் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

எதிர்கட்சிகளை மிரட்டுவதற்காகவே இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சிபிஐ தரப்பில் எந்த பதிலும் இல்லை. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்விகளுக்கு சிபிஐ  பதிலளிக்கவில்லை.

publive-image
Advertisment
Advertisements

ஆய்வில் கண்டறியபட்ட முக்கிய தகவல்கள்

2004 முதல் 2014 ஆட்சியில், ஆதாவது காங்கிரஸ் ஆட்சியில், 2 ஜி வக்கு முதல் காமன்வெல்த் போடிகளில் நடைபெற்ற ஊழல் இப்படியாக 72 முக்கிய தலைவகள் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி கட்சியான திமுகவில் உள்ள தலைவர்களாக உள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில், 43 எதிர்கட்சி தலைவர்கள் மீது நடைபெற்ற சிபிஐ விசாரணையில் 12 பேர் பாஜக-வை சேர்ந்தவர்கள். அமித்ஷா, முன்னாள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா. பிரமோத் மகாஜன் மரணத்திற்கு பிறகும்கூட, 2ஜி வழக்கு தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது ( 2012)

பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற சிபிஐ விசாரணையில், 118 எதிர்கட்சி தலைவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் – 20 காங்கிரஸ் 26. சோனிய காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் , முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ஆகியோர் மீது சிபிஐ ரெய்டு பாய்ந்தது.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து இராச்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி உள்ளனர். இந்த இரு கட்சிகளும் பிஹார் மற்றும் ஒடிசாவில் ஆட்சி செய்து வருகிறது.

publive-image

2014 முதல் 2022 வரை வெறும் 6 பாஜக தலைவர்கள் மீது மட்டுமே சிபிஐ விசாரணை பாய்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

பாஜக ஆட்சி 2014 முதல்  தற்போது வரை

சிபிஐ வழக்குகள்

பாஜக – 6

திரிணாமுல் காங்கிரஸ் – 30

காங்கிரஸ் – 20

பிஜு ஜனதா தளம்- 10

இராச்டிரிய ஜனதா தளம்- 10

பகுஜன் சமாஜ் கட்சி- 5

சிபிஎம்- 4

அதிமுக- 4

திமுக – 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: