ஆதார் கார்டில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், UIDAI துவக்கியுள்ள ஆதார் தொடர்பான டுவிட்டர் ஹேண்டிலில் நமது சந்தேகங்களை கேட்டால், பதில் சிட்டுக்குருவி போல் பறந்துவந்து விழுகிறது.
Advertisment
இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
UIDAI அமைப்பு, ஆதார் எண் பயன்பாட்டாளர்களுக்கு உள்ள பிரச்னைகள், முகவரி மாற்றுதல், மொபைல் எண் மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் எளிதாக நடைபெற வேண்டும் என்பதற்காக @Aadhaar_care என்ற டுவிட்டர் ஹேண்டிலை உருவாக்கியுள்ளது.
Advertisment
Advertisements
இந்த டுவிட்டர் ஹேண்டில், உருவான சில தினங்களுக்குள்ளாகவே, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது அதன் பாலோயர்களாக உள்ளனர். இது UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் ஹேண்டில் என்பதால், யாவரும் பயமின்றி பயன்படுத்தலாம். நம்முடைய சந்தேகங்கள் விரைவில் தீர்த்து வைக்கப்படுவதால், பலரும் தற்போது இந்த வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
டுவிட்டர் கணக்கு இல்லாதவர்கள் UIDAI அமைப்பின் கால் சென்டர் எண் 1947க்கோ அல்லது help@UIDAI.gov.in அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை செய்யும் விதம்
இந்த ஹேண்டிலில், நாம் டேக் செய்தபின் நமது சந்தேகங்களை கேட்க வேண்டும். UIDAI அதிகாரி, உங்களது டுவிட்களை பார்த்த பிறகு அதற்கான தீர்வுகளை, தனியாகவோ, அல்லது அந்த டுவிட்டர் ஹேண்டிலேயோ தெரிவிப்பார்.
பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள், மொபைல் நம்பர், இமெயில் ஐடி அப்டேட் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு இந்த டுவிட்டர் ஹேண்டிலை பயன்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.