UPSC 2019 women Topper Srushti Deshmukh : யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தங்களுக்கு இதுநாள் வரையில் தூண்டு கோளாக இருந்த அனைவருக்கும் அம்மாணவர்கள் நன்றியை கூறி வருகின்றனர். வெற்றி பெற்ற 759 நபர்களில் 577 ஆண்கள் மற்றும் 182 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தவர் ஸ்ருஷ்டி ஜெயந்த் தேஷ்முக். இந்திய அளவில் 5ம் இடம் பிடித்த இவர் கெமிக்கல் எஞ்சினியரிங் பட்டதாரி ஆவார்.
தேர்தல் களப்பணியில் ஷ்ருஷ்டி
23 வயதான இவர், பல்வேறு இளைஞர்களுக்கு ரோல் மாடலாக மேலும் ஒரு சிறப்பான பணியில் ஈடுபட உள்ளார். ஆம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள், முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்கள், மற்றும் பெண்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த உள்ளார்.
தேர்வில் பெற்ற இவரை, நேரடியாக சென்று வாழ்த்தியுள்ளனர் போபால் மாவட்ட தேர்தல் அதிகாரிகள். போபால் மட்டும் மாநிலம் முழுவதும் யூத் ஐகானாக மாறி இருக்கும் இவரிடம் விழிப்புணர்வு சேவைகளில் பங்காற்ற அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அழைப்பை ஏற்றுள்ள ஸ்ருஷ்டி Systematic Voter’s Education and Electoral Participation (SVEEP) என்ற நிகழ்ச்சியின் வாயிலாக உள்ளூரில் இருக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார். நான்கு கட்டங்களாக மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தேர்தல் வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பா…ராகுல் காந்தி தொகுதி வயநாட்டில் 3 காந்திகள் போட்டி!