யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) புதன்கிழமை இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) பயிற்சி அதிகாரி பூஜா மனோரமா திலீப் கேத்கரின் 2022 சிவில் சர்வீசஸ் தேர்வில் (சிஎஸ்இ) வேட்புமனுவை ரத்து செய்தது.
மேலும், அவர் கமிஷனின் எதிர்கால தேர்வுகளில் கலந்து கொள்ள தடை விதித்தது. அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை தேர்வு எழுதியதன் மூலம் விதிகளை மீறியது தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க
முன்னதாக ஜூலை 18ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் ஒன்று வழங்கப்பட்டது. அதில், “தேர்வு விதிகளில் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி தனது அடையாளத்தைப் போலியாகப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பதிலை ஜூலை 25 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அவர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை மேலும் அவகாசம் கேட்டார். யூபிஎஸ்சி ஜூலை 30 ஆம் தேதி மாலை 3.30 மணி வரை தனது சமர்ப்பிப்புகளைச் செய்ய அனுமதித்தது.
இந்நிலையில், “அவருக்கு அனுமதிக்கப்பட்ட கால நீட்டிப்பு இருந்தபோதிலும், அவர் தனது விளக்கத்தை பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார். ஆகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என யூ.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
கேத்கரின் வழக்கின் பின்னணியில், UPSC 2009 முதல் 2023 வரை பரிந்துரைக்கப்பட்ட 15,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவை ஆய்வு செய்தது.
மேலும் அவரைத் தவிர வேறு எந்த வேட்பாளரும் CSE விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான முயற்சிகளைப் பெறவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.
ஜூன் மாதம் புனே கலெக்டரேட்டில் பயிற்சிக்காக சேர்ந்த கேத்கர், சிஎஸ்இ தேர்வில் ஓ.பி.சி மற்றும் பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“