UPSC Full Exam Calendar 2020 Released @upsc.gov.in:ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகும் கனவில் இருப்பவர்களுக்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) , 2020ம் ஆண்டில் மத்திய அரசு பணிகளில் சேர்வதற்காக 25 தேர்வுகளை நடத்த உள்ளது. UPSC, 2020ம் ஆண்டில் நடத்த உள்ள தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இஞ்ஜினியரிங் சர்வீஸ் முதனிலை தேர்வுடன் 2020ம் ஆண்டு துவங்குகிறது. இந்த தேர்வு, 2020, ஜனவரி 5ம் தேதி நடைபெற உள்ளது.
2019, ஜூன் 2ம் தேதி, சிவில் சர்வீஸ் முதனிலைத்தேர்வு நடைபெற்றிருந்த நிலையில், 2020ல் இந்த முதனிலை தேர்வு, மே 31ம் தேதி நடைபெற உள்ளது. ஐ.எப்.எஸ். எனப்படும் Indian Forest services தேர்வும், அதேநாளில் (2020, மே 31ம் தேதி) நடைபெற உள்ளது. UPSC, 2020ம் ஆண்டில் நடத்த உள்ள தேர்வுகளின் அட்டவணையை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.inல் வெளியிட்டுள்ளது. IAS மற்றும் IFS முதனிலை தேர்வுகளுக்கான விண்ணப்பிக்க, பிப்ரவரி 2ம் தேதியில் துவங்கி மார்ச் 3ம் தேதி என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டின் முதல்மாதமான ஜனவரி மாதத்திலேயே, இஞ்ஜினியரிங் சர்வீஸ் முதனிலை தேர்வு, கம்பைன்டு ஜியோசயின்டிஸ்ட் முதனிலை தேர்வு மற்றும் UPSC RT தேர்வுகள் நடைபெற உள்ளன.
2020, ஜனவரி 5ம் தேதி நடைபெற உள்ள இஞ்ஜினியரிங் சர்வீஸ் முதனிலை தேர்விற்கான அறிவிக்கை, 2019, செப்டம்பர் 25ம் தேதியே வெளியிடப்படும்.
2020, ஜனவரி 19ம் தேதி கம்பைன்டு ஜியோசயின்டிஸ்ட் மற்றும் UPSC RT தேர்வுகள் நடைபெறும்.
பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்வகையிலான கம்பைன்டு டிபென்ஸ் சர்வீஸ் தேர்விற்கான அறிவிக்கை, இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். இந்த தேர்வு, 2020, பிப்ரவரி 2ம் தேதி நடைபெறும்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை ( CISF)யில் அசிஸ்டெண்ட் கமாண்டண்ட் பதவிக்கான தேர்வு, 2020 மார்ச் 1ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான அறிவிக்கை, இந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி வெளியிடப்படும்.