யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்: தலை நிமிர வைத்த தமிழக மாணவர்கள்!!!

மதுபாலன் சென்னையை சேர்ந்தவர். இவர் இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார்

By: Updated: April 28, 2018, 03:28:35 PM

ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முடிவுகள் நேற்று (27.4.18) வெளியாகின. இதில், தமிழகத்தை சேர்ந்த 50 மாணவர்கள் வெற்றி பெற்று தமிகத்தை தலை நிமிர வைத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.017-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 11 லட்சம் பேர் தேர்வுகளை எழுதினார்கள். மெயின் தேர்வுகள் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதிவரை நடைப்பெற்றன. 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நேர்முகத் தேர்வுகளும் நடந்தன. இதில் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, நேர்முக தேர்வின் முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. மொத்தம் 990 பேர்  அகில இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும்,  தமிழகத்தில் இருந்து 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் இடம் பிடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த துரிஷெட்டி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலிடத்தை பிடித்துள்ளார்.  அதனைத்தொடர்ந்து, டாக்டர் வி.கீர்த்திவாசன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 29-வது ரேங்கும், மதுபாலன் 71-வது ரேங்கும், சிவகுரு பிரபாகரன் 101-வது ரேங்கும், சாய் ஸ்ரீதர் 107-வது ரேங்கும், பாலசந்தர் 129-வது ரேங்கும் பெற்று   தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில், மதுபாலன் சென்னையை சேர்ந்தவர்.  இவர் இந்திய அளவில் 71-வது இடமும், தமிழக அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார். மேலும், சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இந்த தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக தமிழக மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Upsc exam results

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X