Advertisment

மக்களின் விருப்பதிற்கேற்ப இலவசமாக திரையிடப்பட்ட உரி ... மொபைல் தியேட்டரை ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர்...

நாள் ஒன்றிற்கு 09:20 am, 01:30 pm, 05:00 pm, மற்றும் 08:00 pm என நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Uri Movie Screening Amethi Constituency

Uri Movie Screening Amethi Constituency

Uri Movie Screening Amethi Constituency : உத்திரப் பிரதேசம் மாநிலம், அமேதி தொகுதி (ராகுல் காந்தியின் தொகுதி) இது நாள் வரை ஒரு திரையரங்கினையும் பார்த்ததில்லை. சமீபத்தில் இந்தியில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் உரி : தி சர்ஜிக்கல் ஸ்டரைக் (Uri: The Surgical Strike) படத்தினை இலவசமாக திரையிடப்பட்டு வருகிறது. அதுவும் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி ஏற்பாடு செய்து கொடுத்த மொபைல் ஹால் மூலமாக.

Advertisment

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அமேதி சட்டமன்ற தொகுதியில் நின்று 2014 தேர்தலில் தோல்வி அடைந்தவர் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி என்பது குறிப்பிடத்தக்கது.

Uri Movie Screening Amethi Constituency - குறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கருத்து

குடியரசு தினவிழா தொடங்கியதில் இருந்து அமேதியில் மொபைல் ஹால் மூலமாக இந்த படம் பலருக்கும் திரையிடப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு, இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக, சர்வதேச எல்லையை தாண்டி பாகிஸ்தானிற்குள் சென்று தீவிரவாதிகளின் கூடாரத்தை வேறோடு சாய்த்தது இந்திய ராணுவம். இதுவே இந்த படத்தின் கதையும் கூட.

அமேதியில் முறையாக இயங்கக்கூடிய திரையரங்குகள் என்று ஒன்றும் இல்லை. தொடர்ந்து இப்பகுதி மக்களிடம் இப்படத்திற்காக வலுத்துவரும் எதிர்பார்ப்பினால் இந்த ஏற்பாட்டினை அமைச்சார் செய்தார் என்று பா.ஜ.க இளைஞரணி பொதுச் செயலாளர் விஷூவ் மிஷ்ரா கூறியுள்ளார்.

இந்த மொபைல் ஹாலில் ஒரே நேரத்தில் 150 நபர்கள் அமர முடியும். நாள் ஒன்றிற்கு 09:20 am, 01:30 pm, 05:00 pm, மற்றும் 08:00 pm என நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 2000 பேர் இந்த படத்தை பார்த்துள்ளனர்.

மிஷ்ரா “இந்த படம் இத்தொகுதி இளைஞர்களிடம், நாட்டுக்காக எல்லையில் நின்று உயிர் துறந்த வீரர்களின் தியாகத்தை சொல்கிறது. ராகுல் காந்தி பொய் என்று கூறிக் கொண்டிருக்கும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிய படம் இது. இந்த தேர்தலில் ராகுல் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் தோற்கடித்து உண்மையான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இளைஞர்கள் நடத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தீபக் சிங் பேசுகையில் “இந்த ஏற்பாடுகள் அனைத்தும் வாக்கினைப் பெறுவதற்காக மட்டும் தான். ராணுவ வீரர்கள் எல்லையில் நின்று போராடுவது ஒன்றும் முதல் முறை இல்லை. ஆனால் அதற்காக ஒரு கட்சி உரிமை கோருவது இது தான் முதல் முறை. அமேதி மக்களுக்கு உண்மை எதுவென்று தெரியும். இது போன்ற படத்தின் திரையிடல்களால் ஏமாந்து போக மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் கோவிந்த் சிங் பேசுகையில் காங்கிரஸ் கட்சி அமேதி நகருக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. அதனால் தான் நாங்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் அவர்கள் சிக்கலில் மாட்டியது போல் உணர்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Smriti Irani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment