Advertisment

அலர்ட் கொடுத்த அமெரிக்கா; லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பியை நாடு கடத்த மும்பை போலீசார் தீவிரம்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக அன்மோலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை தொடங்க இருப்பதாக மும்பை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

author-image
WebDesk
New Update
law bish

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், லாரன்ஸின் இளைய சகோதரர் அன்மோல் பிஷ்னோய் (25) தங்கள் நாட்டில் இருப்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் மும்பை காவல்துறைக்கு அலர்ட் கொடுத்துள்ளது. 

Advertisment

இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர், இது தொடர்பாக, குற்றப்பிரிவு கடந்த மாதம் இங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தை அணுகியது.

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக அன்மோலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை தொடங்க இருப்பதாக மும்பை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது என மூத்த அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

லாரன்ஸ் சிறையில் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு உட்பட முக்கிய ஆப்ரேஷன்களை அன்மோலால் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் என்சிபி (அஜித் பவார்) தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாபா சித்திக் கொலையில் அன்மோலின் பெயர் உள்ளது.  பாபா சித்திக்கை துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகளுடன் அன்மோல் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த வாரம், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அன்மோல் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்தது. 2022 ஆம் ஆண்டில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொன்ற குற்றவாளிக்கு ஆயுதங்கள் மற்றும் தளவாட உதவிகளை வழங்கியதாகக் கூறப்படும் ஒரு வழக்கு உட்பட, தப்பியோடிய அவர் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கான் வழக்கு குற்றப்பத்திரிகையில் அன்மோல் தேடப்படும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் (ஆர்சிஎன்) கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

"ஆர்சிஎன் அடிப்படையில், அமெரிக்க அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு எங்களை அணுகி அன்மோல் அமெரிக்காவில் இருப்பது குறித்து அலர்ட் கொடுத்தனர்," என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க:   US alerts India on Lawrence Bishnoi’s brother, Mumbai Police move for extradition

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட இதர விண்ணப்பத்தைத் தொடர்ந்து, தேவையான ஆவணங்களைச் செயல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அமெரிக்க அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைக்கும் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுள்ளன. நாடு கடத்துவதற்கான ஒப்புதல் கிடைத்துவிட்டால் மும்பை போலீஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் அன்மோலை நாடு கடத்தி காவலில் எடுக்கும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment