அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்புடன் தனது முதல் இந்திய பயணத்திற்காக திங்கள்கிழமை அகமதாபாத்திற்கு வருகை தர உள்ளார். அவரை பகல் 11.40 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் மோடி வரவேற்கிறார். பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத்தில் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாற்றவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி 24 முதல் 25 வரை இந்தியாவில் இருப்பார். டிரம்பின் வருகைக்கு முன்னதாக, டெல்லி காவல்துறை தேசிய தலைநகரில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி மாலை நேரங்களில், டெல்லி கன்டோன்மென்ட், டெல்லி-குர்கான் சாலை (என்ஹெச் 48), தவுலா குவான், சாணக்யபுரி, எஸ்பி மார்க், ஆர்எம்எல் ரவுண்டானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். போக்குவரத்து நிலைமைக்கு ஏற்ப தேவையான வாகனங்கள் திசைதிருப்பல்கள் மேற்கொள்ளப்படும்”என்று தில்லி காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் முதல் தம்பதியை வரவேற்க சபர்மதி ஆசிரம அதிகாரிகள் தயாராக உள்ளனர்.
ரிவர் ஃபிரண்டிற்கு செல்லும் சபர்மதி ஆசிரமத்தின் பகுதி இப்போது ஒரு தற்காலிக கட்டத்தைக் கொண்டுள்ளது, அங்கு மாநிலத் தலைவர்களும் முதல் பெண்மணியும் நிறுத்தப்படலாம். கிழக்குக் கரையில் உள்ள சபர்மதி ஆற்றின் குறுக்கே, டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு பெரிய போஸ்டர் போடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 2 நாள் இந்திய பயணத்தின் முழுமையான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நாள் 1 - பிப்ரவரி 24, 2020
காலை 11:40: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குகின்றனர்.
பிற்பகல் 12:15: அதிபர் டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் சபர்மதி காந்தி ஆசிரமத்திற்கு வருவார்கள்.
பிற்பகல் 1:05: அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து, மொடேரா மைதானத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.
பிற்பகல் 3:30: டிரம்ப்பும் மெலனியாவும் ஆக்ராவுக்கு புறப்படுவார்கள்.
பிற்பகல் 4:45: டிரம்ப்பும் மெலனியாவும் ஆக்ராவுக்கு வருவார்கள்.
மாலை 5:15: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் தாஜ்மஹாலைப் பார்க்க வருகை தருவார்கள்.
இரவு 7:30: அமெரிக்க அதிபர் டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை நிலையத்திற்கு வருவார்.
நாள் 2 - பிப்ரவரி 25, 2020
காலை 10:00: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேசிய தலைநகரான டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் மரபான வரவேற்பைப் பெறுவார்.
காலை 10:30: ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் அமெரிக்க அதிபர் மாலை அணிவிப்பார்.
காலை 11:00: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியை ஐதராபாத் மாளிகையில் சந்திப்பார்.
பிற்பகல் 12:40: அமெரிக்க ஜனாதிபதியும் பிரதமர் மோடியும் பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பத்திரிகை அறிக்கையை வெளியிடுவார்கள்.
இரவு 7:30: அமெரிக்க அதிபர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்திப்பார்.
பிற்பகல் 10:00: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்புடன் சேர்ந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் புறப்படுவார்.