Advertisment

கட் அவுட், கண்கவர் பதாகைகள்: ட்ரம்ப் வரவேற்பு கோலாகலக் காட்சிகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) வருகிறார். இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கட் அவுட், கண்கவர் பதாகைகள்: ட்ரம்ப் வரவேற்பு கோலாகலக் காட்சிகள்

donald trump, donald trump india visit, us president donald trump, us president india visit, donald trump india, donald trump in india, india news, indian express

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) வருகிறார். இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப்.

Advertisment

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வருகிறார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து, மைதானம் வரையிலான, 22 கி.மீ., தூரத்தை கடக்கும்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும், வழியெங்கும், மக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

publive-image அமெரிக்க அதிபர் டிரம்ப், முதன்முறையாக இந்தியா வர உள்ளார். அவருடன் மெலானியா டிரம்பும் வர உள்ளார். இவர்களை வரவேற்கும் பொருட்டு, அகமதாபாத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்...

 

publive-image அகமதாபாத் விமானநிலையம் வந்திறங்கும் அவர்கள் சபர்மதி ஆஸ்ரமம் செல்கின்றனர்.

 

publive-image அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப், மோடி சிறப்புரையாற்ற உள்ளனர்.

 

publive-image இந்திய பயணத்தின் 2ம்நாள் நிகழ்ச்சிக்காக டில்லி செல்லும் டிரம்புக்கு, ராஷ்டிரபதி பவனில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின் ராஜ்காட் செல்ல உள்ளார்.

 

publive-image நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி பிற்பகல் 1 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

publive-image டிரம்ப், சபர்மதி ஆஸ்ரமம் வர இருப்பதையொட்டி,, அப்பகுதி மின்னொளியால் ஜொலிக்கிறது.

 

publive-image டிரம்ப், தாஜ்மகாலும் செல்ல உள்ளார். பொதுமக்கள் பார்வை தடைசெய்யப்பட்டு, முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

publive-image முன்னதாக, டிரம்பை வரவேற்கும் வகையிலான அலங்கார வளைவு, அதிவேகமாக வீசிய காற்று காரணமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

டிரம்ப்பை வரவேற்க கண்கவர் பேனர் - ஆங்கிலத்தில் படிக்க

Narendra Modi President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment