கட் அவுட், கண்கவர் பதாகைகள்: ட்ரம்ப் வரவேற்பு கோலாகலக் காட்சிகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) வருகிறார். இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப்.

By: Updated: February 24, 2020, 12:08:14 PM

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று(பிப்.,24) வருகிறார். இந்தியாவில், 36 மணி நேரம் செலவிடுகிறார் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வருகிறார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து, மைதானம் வரையிலான, 22 கி.மீ., தூரத்தை கடக்கும்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு, நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ள கலைஞர்களின், கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. மேலும், வழியெங்கும், மக்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அமெரிக்க அதிபர் டிரம்ப், முதன்முறையாக இந்தியா வர உள்ளார். அவருடன் மெலானியா டிரம்பும் வர உள்ளார். இவர்களை வரவேற்கும் பொருட்டு, அகமதாபாத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்…

 

அகமதாபாத் விமானநிலையம் வந்திறங்கும் அவர்கள் சபர்மதி ஆஸ்ரமம் செல்கின்றனர்.

 

அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடக்கும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப், மோடி சிறப்புரையாற்ற உள்ளனர்.

 

இந்திய பயணத்தின் 2ம்நாள் நிகழ்ச்சிக்காக டில்லி செல்லும் டிரம்புக்கு, ராஷ்டிரபதி பவனில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின் ராஜ்காட் செல்ல உள்ளார்.

 

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி பிற்பகல் 1 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக அப்பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

டிரம்ப், சபர்மதி ஆஸ்ரமம் வர இருப்பதையொட்டி,, அப்பகுதி மின்னொளியால் ஜொலிக்கிறது.

 

டிரம்ப், தாஜ்மகாலும் செல்ல உள்ளார். பொதுமக்கள் பார்வை தடைசெய்யப்பட்டு, முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

முன்னதாக, டிரம்பை வரவேற்கும் வகையிலான அலங்கார வளைவு, அதிவேகமாக வீசிய காற்று காரணமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

டிரம்ப்பை வரவேற்க கண்கவர் பேனர் – ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Us president donald trump narendra modi india visit namaste trump

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X