தற்போதைய, பொருளாதார நெருக்கடியால் வேலை இழந்த லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு உதவ இந்த நடவடிக்கை அவசியம் என்றும் டிரம்ப் கூறினார்.
நவம்பர் மாதம் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பிரகடனத்தை வெளியிட்ட டிரம்ப், விசா ரத்து தொடர்பாக செனட் உறுப்பினர்கள், வணிக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தெரிவித்த கருத்தை முற்றிலுமாக புறக்கணித்தார்.
ஜூன் 24 முதல் இந்த பிரகடனம் நடைமுறைக்கு வர இருப்பதால், இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 2021 ஆம் நிதியாண்டு காலத்திற்கு வழங்கப்பட்ட எச் -1 பி விசாக்கள் பாதிக்கப்படும். 2021ம் நிதியாண்டு காலம் அமெரிக்காவில் வரும் அக்டோபர் 1ம் தேதி துவங்குகிறது.
அமெரிக்க தூதரக அலுவலங்களில் எச் -1 பி விசா முத்திரையைப் பெறுவதற்காக, அவர்கள் இந்த ஆண்டின் இறுதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும், எச் -1 பி விசாக்களை புதுப்பிக்க விரும்பும் ஏராளமான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்த முடிவு கடுமையாக பாதிக்கும்.
” அமெரிக்கா தொழிலாளர் சந்தையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தாக்கம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய, உள்நாட்டு வேலையின்மை,தொழிலாளர் தேவையில் நிலவும் மந்தமான போக்கு போன்ற அசாதாரண சூழலில் இந்த முடிவு அவசியமாகிறது” என்று டிரம்ப் வெளியிட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பிப்ரவரி-மே மாதங்களுக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட நான்கு மடங்காக உயர்ந்தது. அமெரிக்கா தொழிலாளர் புள்ளிவிவர அலுவலகம் இதுவரை பதிவு செய்யாத மிகக் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்ததாக டிரம்ப் தனது தெரிவித்திருந்தார்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
அமெரிக்காவில் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் கிரீன் கார்டு வழங்குவதற்கான தடையையும் இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்கா அதிபர் நீட்டித்துள்ளார்.
தற்காலிகப் பணிகளுக்காக அமெரிக்காவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் நுழைகின்றனர். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் அமெரிக்க தொழிலாளர்கள் இவர்களோடு போட்டியிடும் சூழல் உள்ளது. சாதாரண காலங்களில், நேர்த்தியாக நிர்வகிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பணியமர்த்தும் திட்டங்கள் பொருளாதாரத்திற்கு நன்மைகளை வழங்கும். ஆனால் COVID-19 பெருந்தொற்று விளைவாக ஏற்பட்ட பொருளாதார சூழ்நிலைகளில், அத்தகைய வேலைவாய்ப்பை அங்கீகரிப்பது அமெரிக்க தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன, ”என்று அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து அதிகமான தொழிலாளர்கள் வருகையால், வேலைவாய்ப்பின் விளிம்பு நிலையில் உள்ள தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார். விளிம்பில் நிற்கும் மக்கள் பொருளாதார வளர்ச்சியின் போது கடைசியாக பயனடைகின்றனர். பொருளாதார வீழ்ச்சியின் போது இத்தகைய மக்கள் தான் “முதலில் வெளியேறுகின்றனர்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், சிறுபான்மையினர்கள், பட்டப்படிப்பை முடிக்காதவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட வரலாற்று ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் வேலைவாய்ப்பின் விளிம்பு நிலையில் அதிகளவு உள்ளனர்.
பிரகடனத்தின்படி, அமெரிக்காவின் சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் அமெரிக்க குடிமகனின் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தை. போன்ற வெளிநாட்டு குடிமக்கள் மீது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இந்த உத்தரவின் மூலம் வேலைநிமித்தமாக எச்-1பி, எச்-2பி, எல் விசா மூலம் வருபவர்கள் தடை செய்யப்படுவார்கள், மிக்குறைந்த அத்தியாவசியமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம், ஜே விசா மூலம் அமெரிக்காவுக்கு வருகை புரியும் பயிற்சி, ஆசிரியர், கவுன்சிலர், இன்டர்ன்ஷிப் போன்றவைக்கும் இந்த தடை பொருந்தும்.
அத்தியாவசிய உணவு வினியோகச் சங்கிலிக்குத் தேவையான தற்காலிக ஊழியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சமீபத்திய பிரகடனத்திலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil