கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்காவில் அனுமதி மறுப்பு - us rejects covaxin for emergency use authorization | Indian Express Tamil

கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்காவில் அனுமதி மறுப்பு

us rejects covaxin: பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரிய ஓகுஜன் நிறுவனத்தின் கோரிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை நிராகரித்துள்ளது.

covaxin, FDA

பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. அமெரிக்க ஓகுஜென் நிறுவனத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை சர்வதேச அளவில் வணிகமயமாக்குவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி ஒகுஜன் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு விண்ணப்பித்திருந்தது. தற்போது அதனை அமெரிக்க FDA நிராகரித்துள்ளது. மேலும் கூடுதலாக பரிசோதனைகளை நடத்திய முடிவுகளுடன் பயோ உரிமை விண்ணப்பம்(BLA)வுக்கு விண்ணப்பிக்க அமெரிக்க FDA அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பெறப்படும் ஒப்புதல் முழு ஒப்புதல் என்று அழைக்கப்படுகிறது.

இனி கோவாக்சினுக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை பெற நிறுவனம் முயற்சிக்காது என்றும், அமெரிக்க FDA கூறியபடி, Emergency Use Authorization (EUA) பதிலாக biologics licence application(BLA) வுக்கான விண்ணப்பத்தை சமர்பிப்பதை ஓகுஜன் தொடர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கூடுதல் தகல்கள் மற்றும் தரவுகளை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஓகுஜென் நிறுவனம் கூறும்போது, அமெரிக்காவில் கோவாக்சினை அறிமுகப்படுத்துவதற்கு தாமதமாகலாம். BLA வுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தேவையான கூடுதல் தகவல்கள் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கூடுதல் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தேவைப்படும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. கோவாக்சினை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறோம் என தலைமை நிர்வாக அதிகாரியும், ஒகுஜனின் இணை நிறுவனருமான டாக்டர் சங்கர் முசுனூரி கூறினார்.

இந்த வேறுபடுத்தப்பட்ட தடுப்பூசி டெல்டா மாறுபாடு உட்பட SARS-CoV-2 வகைகளை சரி செய்வதற்கான திறனைக் கொடுக்கிறது. கனடாவில் கோவாக்சின் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக பாரத் பயோடெக் நிறுவனம் ஒகுஜன் நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. ஒகுஜன் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விற்பனையில் பாரத் பயோடெக் ஈடுபடவுள்ளது. கோவாக்சினை வணிகமயமாக்குவதற்கான பிரத்யேக உரிமைகளைப் பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Us rejects covaxin for emergency use authorization