ஈரானில் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க இந்தியாவிற்கு தடை இல்லை

கச்சாப் பொருட்களுக்கு வழங்கப்படும் பணத்தினை நேரடியாக ஈரானால் உபயோகிக்க இயலாது. உணவு அல்லது மருந்துப் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும்.

கச்சாப் பொருட்களுக்கு வழங்கப்படும் பணத்தினை நேரடியாக ஈரானால் உபயோகிக்க இயலாது. உணவு அல்லது மருந்துப் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்திக் கொள்ள இயலும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஈரான் பொருளாதாரத் தடை, அமெரிக்கா வர்த்தகம், பெட்ரோல் டீசல் விலை

ஈரான் பொருளாதாரத் தடை

ஈரான் பொருளாதாரத் தடை :  ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது அமெரிக்கா. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டில் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு அமெரிக்கா கூறியிருந்தது.

Advertisment

இந்நிலையில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் வாங்க தடை ஏதும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த எட்டு நாடுகளில் நான்கு நாடுகளின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருகின்ற திங்கள் கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க தடையில்லை

இந்தியா, ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்ப் பொருட்களின் அளவை அடுத்த ஆண்டு முதல் அதிகரித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பொருளின் அளவினை குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த இறக்குமதியும் நீண்ட காலத்திற்கானதில்லை. மார்ச் மாதத்திற்கு பின்பு ஈரானுடன் ஒப்பந்தம் போட வேண்டுமானால் அதற்காக அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

அமெரிக்கா 8 நாடுகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சில காலங்களுக்கு மட்டுமே. எண்ணெய்யின் இறக்குமதி அளவினை கட்டாயமாக குறைக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறது அமெரிக்கா. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் திங்களன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் ஈரான்பொருளாதாரத் தடை

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் பெரிதும் ஏமாற்றத்தினை அடைந்திருக்கிறது ஈரான் மற்றும் ஏனைய நாடுகள். ட்ரம்ப் நிர்வாகம் இது குறித்து பேசுகையில் “மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. பொருளாதார தடை விதிக்க முழு மூச்சுடன் ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

எந்தெந்த வங்கிகள், நாடுகள், மற்றும் வர்த்தகங்கள் அமெரிக்காவை விட்டுவிட்டு ஈரானுடன் வணிகம் செய்கின்றதோ அவை மார்கெட்டிலேயே இல்லாமல் போய்விடும்” என்று கூறியுள்ளது.

2.7 மில்லியன் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஈரான் நாட்டின் பெட்ரோல் ஏற்றுமதி தற்போது 1.6 மில்லியன் வரை குறைந்திருக்கிறது.  பெட்ரோல் டீசல் பொருட்கள் இல்லாமல் இதர வர்த்தகத்தையும் ஈரானுடன் நிறுத்திக் கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்க மாட்டோம் என ட்ரெம்ப் நிர்வாகம் கூறியிருக்கிறது. இது தொடர்பான முழுமையான செய்திகளை  ஆங்கிலத்தில் படிக்க

ஈரான் பொருளாதாரத் தடை - பண பரிவர்த்தனை

தடை விலக்கு பெற்றிருக்கும் நாடுகள், தாங்கள் வாங்கும் பெட்ரோல் பொருட்களிற்கான பணத்தினை நேரடியாக ஈரானிற்கு அனுப்ப இயலாது. அந்த பணத்தினை ஈஸ்க்ரோவ் கணக்குகள் ( escrow accounts ) மூலமாக உள்நாட்டுப் பணமாக போட வேண்டும். அந்த பணத்தினை வைத்துக் கொண்டு, ஈரான் பொருளாதார தடை விதிக்கப்படாத பொருட்கள், உணவுப் பொருட்கள், மற்றும் மருந்துகள் மட்டுமே வாங்கிக் கொள்ள இயலும்.

United States Of America Iran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: