இந்தியாவில் பயணம் செய்யும் அமெரிக்க அரசு ஊழியர்கள் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்வதற்கு முன், முன்அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: US asks its nationals to ‘reconsider travel’ to India’s northeastern states in updated advisory
அமெரிக்காவின் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், அவ்வப்போது நடக்கும் வன்முறைச் செயல்கள் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
“வடகிழக்கு பகுதிகளில் இனக் கலவரக் குழுக்கள் அவ்வப்போது வன்முறைச் செயல்களில் ஈடுபடுகின்றன. இந்த சம்பவங்களில் பேருந்துகள், ரயில்கள், ரயில் பாதைகள் மற்றும் சந்தைகள் மீது குண்டுவீச்சு நிகழ்வுகளும் அடங்கும்,” என்று ஜூலை 23-ம் தேதி அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனை அறிவுரை கூறுகிறது.
அசாம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம் அல்லது திரிபுரா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் வன்முறைச் செய்திகள் எதுவும் இல்லை என்று அந்த பயண ஆலோசனை அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமெரிக்க அரசு ஊழியர்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கு, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய தலைநகரங்களுக்கு வெளியே எந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போதும் முன் அனுமதி பெற வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த பயண ஆலோசனையானது வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்வது தொடர்பான நிலை 3-ன் கீழ் வைத்துள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் நிலை 4-ன் கீழ் வருகிறது, இது பயணம் செய்யாதீர்கள் என்பதைக் குறிக்கிறது.
“வன்முறை மற்றும் குற்ற அச்சுறுத்தல் காரணமாக மணிப்பூருக்கு பயணம் செய்ய வேண்டாம். நடந்துகொண்டிருக்கும் இன அடிப்படையிலான உள்நாட்டு மோதல்கள் விரிவான வன்முறை மற்றும் சமூக இடப்பெயர்வு பற்றிய அறிக்கைகளை விளைவித்துள்ளது. இந்திய அரசின் இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தியாவில் பயணம் செய்யும் அமெரிக்க அரசு ஊழியர்கள் மணிப்பூருக்குச் செல்வதற்கு முன், முன்அனுமதி பெற வேண்டும்” என்று இந்த பயண ஆலோசனை கூறுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் (கிழக்கு லடாக் பகுதி மற்றும் அதன் தலைநகரான லே தவிர), மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 10 கி.மீ-க்குள் உள்ள பகுதிகள், நிலை 4-ன் கீழ் வரும் இந்தியாவின் பிற பகுதிகளாக உள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை உள்நாட்டு கலவரம் என்று அமெரிக்க ஆலோசனை கொடியசைத்துள்ளது. யூனியன் பிரதேசத்திலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் வன்முறைகள் அவ்வப்போது நடப்பதாகவும் அது கூறியது.
அமெரிக்காவின் இந்த பயண ஆலோசனைக்கு பதிலளித்த ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஜம்மு காஷ்மீருக்கு இது மிகவும் அதிகம். ஸ்ரீநகரில் இயல்பு நிலை, அமைதி, சுற்றுலா & ஜி-20 தமாஷா பற்றிய அனைத்துப் பேச்சுகளுக்கும், ஜம்மு காஷ்மீர் தொடர்ந்து அமெரிக்க அரசுத் துறை பயண ஆலோசனைகளின் இலக்காக உள்ளது. மோடி அரசால் எதையும் மாற்ற முடியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில், மாவோயிஸ்ட் தீவிரவாத குழுக்கள், அல்லது நக்சலைட்டுகள், கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு தெலங்கானாவில் இருந்து மேற்கு மேற்கு வங்கம் வழியாக பரந்து விரிந்திருக்கும் இந்தியாவின் ஒரு பெரிய பகுதியில் செயல்படுகின்றன. தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா எல்லையில் உள்ள சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் கிராமப்புறப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அவ்வப்போது நிகழ்கின்றன.” அமெரிக்க பயண ஆலோசனை அறிவுறுத்தலில் கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.