உத்தரப் பிரதேசத்தில் 13 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு அவர் போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து இருந்து தப்பியபின் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலைய அதிகாரியால் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கே அவர் அடைத்து வைக்கப்பட்டு நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றபோது, காவல் நிலைய அதிகாரியால் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சைல்ட் லைன் குழுவிடம் கூறியதை அடுத்து, காவல்துறை, அந்த காவல் நிலைய அதிகாரி மற்றும் அந்த சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சிறுமியை வன்புணர்வு செய்த காவல் நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
“சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறுமியின் அத்தை மற்றும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி முதன்முறையாக (ஏப்ரல் 26) காவல் நிலையத்திற்குச் சென்றபோது ஏன் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதைக் கண்டுபிடிப்பது எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளது” என்று லலித்பூர் காவல் கண்காணிப்பாளர் நிகில் பதக் கூறினார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஏப்ரல் 22 ஆம் தேதி நான்கு உள்ளூர் ஆண்கள் தனது மகளை கடத்தி போபாலுக்கு அழைத்துச் சென்றதாக சிறுமியின் தாய் புகார் அளித்தார். அவர்கள் அந்த சிறுமியை போபாலில் 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 26 ஆம் தேதி அந்த நபர்கள் சிறுமியை உள்ளூர் காவல் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அந்த சிறுமி பின்னர் அவருடைய அத்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். ஒரு நாள் கழித்து, போலீசார் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்தனர். மாலையில், சிறுமியின் அத்தை, காவல் நிலைய இல்ல அதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கே அந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுமியை மீண்டும் அவருடைய அத்தையிடம் ஒப்படைத்ததாகவும், அவருடைய பெற்றோர் மறைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 30 ஆம் தேதி போலீசார் அந்த சிறுமியை சைல்ட் லைன் குழுவிடம் ஆலோசனைக்காக ஒப்படைத்தனர். அப்போது, அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.