Uttar pradesh, encounter, Vikas dubey, kanpur encounter, UP police killed in encounter, UP police killed in kanpur firing, UP police killed while trying to arrest criminal, kanpur firing, kanpur news
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், ரவுடிகளை என்கவுன்டர் செய்யும் நடவடிக்கையில், போலீசார் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
முதல்வர் ஆறுதல் : என்கவுன்டர் நிகழ்வில் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும்அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளேன். இறந்த போலீசாரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துக்கொண்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரவுடி விகாஸ் துபே மீது உத்தரபிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. துபே, செளபேபுர் போலீஸ் ஸ்டேசனிற்கு உட்பட்ட திக்ரு கிராமத்தில் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து துபேயை கைது செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட போலீசார், அவன் பதுங்கியிருந்த கட்டத்தை, துணை எஸ்பி தேவேந்திர மிஸ்ரா தலைமையிலான போலீசார்நள்ளிரவு நேரத்தில் சுற்றிவளைத்தனர்.
Advertisment
Advertisements
இதனையறிந்த ரவுடி கும்பல், அலர்ட் ஆனது. போலீசார் மீது ரவுடிக்கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில், துணை எஸ்பி தேவேந்திர மிஸ்ரா, 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 4 கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 8 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ரவுடி விகாஸ் துபே மீது 307 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தநிலையில், அவனை கைது செய்ய சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். போலீசார் அவனை சரணடையுமாறு கேட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, கட்டடத்தின் உச்சியில் இருந்த ரவுடி கும்பல், போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. போலீசார் தக்க பதிலடி கொடுக்க முற்பட்ட நிலையில், அவர்கள் கட்டட உச்சியிலிருந்து சுட்டதால், போலீசாரின் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த சம்பவத்தில் 8 போலீசார் உயிரிழந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், டிஜிபி அஸ்வதி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil