உத்தரபிரதேச மாநிலம் முராத்நகரில் உள்ள தகன மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 23 பேர் மரணமடைந்தனர். இந்த விபத்தில், 15 பேர் காயமடைந்தனர்.
மழை பெய்த காரணத்தினால், மயானத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டத்தின் கீழ் ஒதுங்கியபோது மேற்கூரை இடிந்து விழுந்தது.
அவர்களில் பெரும்பாலோர்
மரணம் அடைந்த ஜெய் ராம் என்பவரின் இறுதி சடங்கின் போது இந்த சோக நிகழ்வு ஏற்பட்டதாக பி. டி. ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. உறனவினர்களில் சிலர், அருகிலுள்ள மற்றொரு கட்டடத்திற்கு ஒதுங்கியதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்) கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருக்கும் நபர்களைத் தேடும் பணியை முடிக்கி விட்டனர்.
"முராத்நகரில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் இதுவரை 38 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேற்படி விசாரணையைத் தொடங்கியுள்ளோம். நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் ”என்று மீரட் பிரதேச ஆணையர் அனிதா சி மெஷ்ராம் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையும் அறிவித்தார்.
உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் நடந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
”உத்தரபிரதேசத்தின் முராத்நகரில் மயானத்தில் நடந்த சாலை விபத்து மிகவும் துயரமானது. இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” என்று பிரதமர் தெரிவித்தார்.