உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சத்சங்கம் மத நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: UP Hathras Stampede Live Updates
காவல்துறையின் கூற்றுப்படி, "ஹத்ராஸ் மாவட்டத்தின் முகல்கர்ஹி கிராமத்தில் மத நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதுவரை 27 உடல்கள் எட்டா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்களில் 23 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் 1 ஆண் ஆகியோர் அடங்குவர் அவர்களின் உடல்களை அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று எட்டா பகுதியின் எஸ்.எஸ்.பி ராஜேஷ் குமார் சிங் கூறினார்,
இதனிடையே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, இந்த சோக சம்பவத்திற்கான காரணங்களை விசாரிக்க ஆக்ரா மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் அலிகார் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட குழுவை அமைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“