உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) காயமடைந்து ரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைனில் வெளியிடப்பட்ட வீடியோக்களில், சிறுமி இரத்த வெள்ளத்தில் தரையில் கிடக்கும் நிலையில், பார்வையாளர்கள் அவரை படம்பிடிக்கவும் வீடியோ எடுக்கவும் செய்தனர்.
"அவர் ஞாயிற்றுக்கிழமை குல்லாக் (உண்டியலை) வாங்க வெளியே சென்றார், ஆனால் வீடு திரும்பவில்லை, அதன் பிறகு அவரது குடும்பத்தினர் அவளைத் தேடத் தொடங்கினர்," என்று காவல்துறை கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் கூறினார்.
இதையும் படியுங்கள்: கேரளா: 9 பல்கலை. துணை வேந்தர்கள் பதவியில் தொடர அனுமதி.. கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
அவரைப் பார்த்த நேரில் பார்த்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். "சம்பந்தப்பட்ட போலீஸ் அவுட்போஸ்ட் இன்சார்ஜ் மனோஜ் பாண்டே, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்" என்று எஸ்.பி சிங் கூறினார்.
எஸ்.பி கூறுகையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் சம்பந்தப்பட்ட சிறுமி ஒரு இளைஞருடன் பேசுவதைக் காட்டுகிறது. “இளைஞரின் அடையாளம் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த அறிக்கை வந்த பிறகே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா இல்லையா என்று கூற முடியும்” என்று எஸ்.பி சிங் கூறினார்.
உத்தரபிரதேச காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளது, “கன்னோஜில், ஒரு அப்பாவி சிறுமி ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார், ஆனால் மக்கள் வீடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். யார் குற்றவாளி என்பதுதான் கேள்வி. அவர்கள் எப்போது பிடிபடுவார்கள்?” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil