பழிவாங்குவதற்காக பாம்பின் தலையை கடித்துத் துப்பிய விநோத மனிதன்!

உத்தரபிரதேச மாநிலம் தன்னை கடித்ததற்காக பழிவாங்கியதாக கூறி, பாம்பின் தலையை ஒருவர் கடித்துத் துப்பிய விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் தன்னை கடித்ததற்காக பழிவாங்கியதாக கூறி, பாம்பின் தலையை ஒருவர் கடித்துத் துப்பிய விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஹர்டோய் பகுதியை சேர்ந்தவர் சோனே லால். இவர், கடந்த சனிக்கிழமை தான் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது தன்னை பாம்பு கடித்ததாக கூறி, அதனை பழிவாங்குவதற்காக பாம்பின் தலையை கடித்துக் குதறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரை பரிசோதித்த மருத்துவர் ஹிதேஷ் குமார் கூறியதாவது, “கோபத்தில் பாம்பை எடுத்து அதன் தலையை கடித்து துப்பியதாக அவர் தெரிவித்தார்”, என கூறினார்.

பாம்பின் தலையை கடித்து துப்பியதால் மயக்க நிலைக்கு சென்ற சோனே லால், அருகேயுள்ள சுகாதார நிலையத்துக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

“அவருடைய அக்கம்பக்கத்தினரான ராம் சேவாக் மற்றும் ராம் ஸ்வரூப் ஆகியோர், அவரை பாம்பு கடித்ததாக தெரிவித்துள்ளனர். அதனால், அவருடைய உடலில் பாம்பு கடி உள்ளதா என தேடினோம். ஆனால், அப்படி எந்தவித காயமும் அவர் உடலில் இல்லை.”, என மருத்துவர் தெரிவித்தார். பாம்பின் உடல் பாகத்தை கடித்ததால் நஞ்சின் பாதிப்பால் சோனே லால் மயக்க நிலையில் உள்ளதாக மருத்துவர் கூறினார்.

இதுகுறித்து அம்மாநில மனநல அமைப்பின் செயலாளர் மருத்துவர் திவாரி, “இச்செயலை சாதாரண மனநிலையில் உள்ள ஒருவர் செய்ய மாட்டார். மிகவும் வன்மத்துடன் உள்ள ஒருவர்தான் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவர்”, என தெரிவித்தார்.

சோனே லால் போதை பொருட்களுக்கு அடிமையானவர் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

×Close
×Close