உத்திர பிரதேசம் மாநிலத்தின் பைஸாபாத் மாவட்டம் அயோத்தியா என பெயர் மாற்றம்

உத்திர பிரதேசம் மாநிலம் பைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தியா மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று திறந்து வைத்தனர்.

உத்திர பிரதேசம் மாநிலத்தின் பைஸாபாத் மாவட்டம் பெயர் மாற்றம்

இந்த திறப்பு விழாவின்போது உரையாற்றிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள பைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தியா மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மேலும் அங்கு ராமர் பெயரில் விமான நிலையமும், தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநத், இஸ்லாமிய பெயரில் உள்ள ஊர், மற்றும் இடங்களை பெயர் மாற்றம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close