உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் பகுதியில் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் புதன்கிழமை பால் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில 18 பேர் உயிரிழந்தனர், மேலும் 19 பேர் காயமடைந்தனர்.
பீகாரில் உள்ள மோதிஹாரியில் இருந்து டெல்லிக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, பெஹ்தா முஜாவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜோஜிகோட் கிராமம் அருகே அதிகாலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பேருந்து வேகமாக வந்து பின்னால் இருந்து பால் டேங்கர் மீது மோதியதாக மாவட்ட நீதிபதி கவுரங் ரதி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த விபத்தில் 14 ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த அனைவரையும் மீட்டு, சிகிச்சைக்காக பாங்கர்மாவ் மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும் உடல்களை கைப்பற்றி தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்று பெஹ்தாமுஜாவர் போலீசார் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், X பக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
”உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ்வில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் நடந்த சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி சோகமானது. இதுபோன்ற திடீர் மரணத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், ”என்று அவர் பதிவிட்டார்.
Read in English: 18 killed, 19 injured as bus collides with milk tanker on Agra-Lucknow expressway in Unnao
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“