உத்தரகாண்ட் மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த பட்டாசு தொழிலதிபரின் மகன் அதுல் அகர்வால் (24). இவர் தனது தந்தைக்குச் சொந்தமான சமீபத்தில் வாங்கப்பட்ட இன்னோவா காரில், தனது 6 நண்பர்களுடன் டேராடூனுக்குப் பயணம் செய்துள்ளார். அவரே வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: As horrific accident that killed 6 young men and women shakes Uttarakhand
இந்நிலையில், அதிவேகமாக இயக்கப்பட்ட அந்த இன்னோவா கார் செவ்வாய் கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கண்டெய்னர் லாரியுடன் மோதியுள்ளது. இதில் கார் சுக்குநூறாக நொறுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் கார் பயணித்த 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்ப இடத்திலே பரிதமாக உயிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார்.
விபத்தில் காரை ஒட்டிச் சென்ற டேராடூனில் வசிக்கும் அதுல் அகர்வால் (24), குணீத் (19), ரிஷப் ஜெயின் (24), நவ்யா கோயல் (23), காமக்ஷி (20) மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த குணால் குக்ரேஜா (23) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் கொரோனேஷன், டூன் மற்றும் இந்திரேஷ் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
உயிர் பிழைத்த ஒரே நபரான சித்தேஷ் அகர்வால் (25) பலத்த காயம் அடைந்து சினெர்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வாகனம் ஏன் வேகமாகச் சென்றது என்பதைப் புரிந்து கொள்ள அவர் சுயநினைவு திரும்பியவுடன் அவருடன் பேசுவார் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
காவல்துறையின் கூற்றுப்படி, இன்னோவா கார் கிஷன் நகர் சௌக் அருகே கண்டெய்னர் டிரக்கைக் முந்த முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், காரை ஓட்டிய அதுல் டிரக்கின் வேகத்தை தவறாக மதிப்பிட்டுள்ளார். அது முன்னேறிய பிறகு பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும் என்று நம்பியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், கன்டெய்னர் லாரி கிஷன் நகர் சௌக்கில் இருந்து பயணித்ததும், இன்னோவா கார் பல்லுபூர் சவுக்கிலிருந்து டேராடூன் நோக்கி சென்று கொண்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது. கன்டெய்னர் கிஷன்நகர் சவுக்கிலிருந்து 1.5 கி.மீ தூரத்தை சுமார் 6 நிமிடங்களில் கடந்து ஓ.என்.சி.ஜி சவுக்கை அடைந்தது. இது சாதாரண வேகத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இன்னோவா கார் நகரை சாதாரண வேகத்தில் கடந்த சென்ற சிசிடிவி காட்சிகளும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன. அதனைக் கொண்டு போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil