/tamil-ie/media/media_files/uploads/2018/07/Priests-.jpg)
Priests
உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் அனைத்து கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்காக, உயர்வகுப்பு பூசாரிகள், பூஜைகள், சடங்குகள் செய்வதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது.
அதே போல் எந்த ஒரு வகுப்பினரும் எந்த தடையும் இன்றி, உத்திரகாண்ட்டில் இருக்கும் கோவில்களுக்கு செல்லாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள் உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷர்மா மற்றும் லோக் பல் சிங்.
மேலும், பயிற்சி பெற்ற எந்த ஒரு நபரும் ஒரு கோவிலின் பூசாரியாக செயல்படுவதற்கு அவருடைய வகுப்பு ஒரு தடை இல்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.
கோவிலுக்கு சொந்தமான பொருள் ஒன்றினை வேறொரு இடத்திற்கு மாற்றி வைப்பது குறித்து ஏற்பட்ட இருதரப்பினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக 2016 ஆம் ஆண்டு ஹரித்துவார் பகுதியில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வழக்கு ஒன்றினை பதிவு செய்தனர்.
மேலும், இக்கோவில்களுக்கு வரும் தாழ்த்தப்பட்ட சாதியினை சேர்ந்த பக்தர்களுக்கு பூசாரிகள் பூசை செய்வதில்லை என்பதையும் அந்த வழக்கில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.