Advertisment

உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்து: மலை நகர்ந்தது; 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு

மீட்பு நடவடிக்கை ஒன்றன் பின் ஒன்றாக பின்னடைவைச் சந்தித்த நிலையில்- 57 மீட்டர் இடிபாடுகளில் சிக்கிய இருதரப்பினருக்கும் உறுதி மற்றும் விடாமுயற்சியின் சோதனையாக இருந்தது.

author-image
WebDesk
New Update
Rescue.jpg

கிட்டதட்ட இந்த விபத்து மற்றும் தொடர்ச்சியான மீட்பு பணிகள் ஒரு மலையை நகர்த்தியது போன்று தான் உள்ளது. 17 நாட்கள், 400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்திற்கு மத்தியில் நேற்று (நவ.28) இரவு 8 மணியளவில் உத்தராகண்ட் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் நிம்மதி பெருமூச்சு விட்டது. நவம்பர் 12 முதல் உத்தரகாசி சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Advertisment

மீட்பு நடவடிக்கை ஒன்றன் பின் ஒன்றாக பின்னடைவைச் சந்தித்த நிலையில்- 57 மீட்டர் இடிபாடுகளில் சிக்கிய இருதரப்பினருக்கும் உறுதி மற்றும் விடாமுயற்சியின் சோதனையாக இருந்தது. மீட்பு நடவடிக்கையின் இறுதி கட்டத்தில் துளையிடும் இயந்திரம் பழுதானது. இறுதியில், 14 "எலி-துளை சுரங்கத் தொழிலாளர்கள்" (Rat-hole miners) கடைசி 12 மீட்டர் தூரத்தை தோண்டி, உள்ளே சிக்கியவர்களை அடைந்தனர்.

முதல் தொழிலாளி மீட்கப்பட்டு வெளியே கொண்டு வந்து அவர் ஆம்புலன்ஸில் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே, மற்ற 40 பேரும் அடுத்தடுத்து மீட்கப்பட்டனர். அங்கு வரிசைகட்டி நின்ற ஆம்புலன்ஸ்கள் அதன் ஹெட்லேம்ப்கள் இருளைப் பிரகாசிக்கச் செய்து சுற்றிலும் புன்னகையைக் காட்டின. 

சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் 8 மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். ஜார்க்கண்டில் இருந்து 15 பேர், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 8, ஒடிசா மற்றும் பீகாரில் இருந்து தலா 5 பேர், மேற்கு வங்கத்தில் இருந்து 3 பேர், உத்தராகண்ட் மற்றும் அசாமில் இருந்து தலா 2 பேர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து ஒருவர் இந்த விபத்தில் சிக்கினர். 

நவம்பர் 12-ம் தேதி அதிகாலை யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா-பார்கோட் சுரங்கப் பாதை தோண்டும் பணியில் இரவு ஷிப்ட் பணியாளர்கள் பணிபுரிந்து வந்த போது எதிர்பாராத விதமாக இடிபாடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 41 தொழிலாளாகள் சிக்கிக் கொண்டனர்.

இது முன்னோடியில்லாத தொடர் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது, இது விரக்தியிலிருந்து விரக்திக்கு திரும்பியது, செவ்வாயன்று ஒரு திருப்புமுனை வரும் வரை. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று மதியம் கூறுகையில், “பாபா பௌக் நாக் ஜியின் மகத்தான கருணை, கோடிக்கணக்கான நாட்டு மக்களின் பிரார்த்தனை மற்றும் அனைவரின் அயராத உழைப்பின் விளைவாக. மீட்புக் குழுவினர், சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணி முடிவடைந்தது. விரைவில், சகோதரர்கள் அனைவரும் வெளியே அழைத்து வரப்படுவார்கள் என்று கூறினார். 

மாலையில் தொழிலாளர்கள் மீட்பு நடவடிக்கை தொடங்கிய போது மீட்புக் குழுவினருடன் முதல்வர் தாமி சுரங்கப் பாதையில் உடனிருந்தார். 

மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டம், தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரும் பணியை  தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மேற்கொண்டனர். மாநில மீட்புக்குழு அவர்களுக்கு உதவியாக இருந்தனர். சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்டு வரும் தொழிலாளர்கள் யாருக்கேனும் உடனடி மருத்துவ வசதி தேவைப்படும் பட்சத்தில் ஒரு தற்காலிக மருத்துவ வசதியும் சுரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

ஆம்புலன்ஸ் பணியில் இருந்த மருந்தாளுனர் டி.சி நௌடியல் கூறுகையில், மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 30 கி.மீ தொலைவில் உள்ள சின்யாலிசூர் சமூக நல மையத்திற்கு கொண்டு செல்லப்படுவர்.  அங்கு 41 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டன. தொழிலாளர்கள் அனைவரும் 48-72 மணி நேரம் வரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. 

தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் மீட்பு என்பது பெரும் சுமையாக இருந்தது. அவர்கள் பல நாட்கள் 

உத்தரகாசியில் முகாமிட்டிருந்தனர். தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  “சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவருக்கும் உத்வேகம் அளித்துள்ளது… இந்த சவாலான நேரத்தில் அவர்களின் குடும்பத்தினர் காட்டிய பொறுமை மற்றும் தைரியத்தை வார்த்தைகளால் பாராட்ட முடியாது"  என்றார்/ தொடர்ந்து, உள்ளே சிக்கிய தொழிலாளர்களிடமும் மோடி தொலைபேசியில் மோடி பேசினார்.

உண்மையில், பல ஏஜென்சிகளும் அதிகாரிகளும் இணைந்து, ஆரம்பத்தில் சமாளிக்க முடியாத பணியாகத் தோன்றியதைச் சாதித்து காட்டினர். 

NDRF, SDRF, BRO, RVNL, SJVNL, ONGC, ITBP, NHAIDCL, THDC, மாநில மற்றும் மத்திய அரசுகள், ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவை இந்த மீட்பு பணியில் பங்காற்றின. 

அதிகாரி ஒருவர் கூறுகையில், வழியில் வந்த பல சவால்களை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது முக்கியமானதாக இருந்தது. இதில் பல பின்னடைவுகளை சந்தித்தோம். டேராடூனில் இருந்து ஆகர் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது போதுமானதாக இல்லை. பின்னர் டெல்லியில் இருந்து ஒரு பெரிய இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அதைப் பயன்படுத்தி மீட்புப் குழுவினர் 57 மீட்டர் இடிபாடுகளில் 45 மீட்டர் தூரம் துளையிட்டனர். 

பின்னர் மிகவும் குறிப்பிடத்தக்க பின்னடைவு வந்தது - துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் மீட்பு குழாய்களுக்குள் உடைந்து, மனிதர்கள் உள்சென்று வெட்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. "அந்த இக்கட்டான இடத்திற்குள் செல்வது கடினம். இருப்பினும் உள் சென்று பல மணிநேரம் கேஸ் கட்டர்களைப் பயன்படுத்தி முற்றிலும் அகற்றப்பட்டது. என்று இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்த ட்ரெஞ்ச்லெஸ் இன்ஜினியரிங் நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணர் பிரவீன் யாதவ் கூறினார்.

உடைந்த பிளேடுகள் வெளியே எடுக்கப்பட்ட உடன் எலி-துளை சுரங்கம் பற்றி நன்கு அறிந்த 12 மீட்புக் குழுவினர் வேறொரு வழியில் உள் சென்று பணியைத் தொடங்கினர். எலி-துளை சுரங்கம் தோண்டுவது என்பது குறுகிய, கிடைமட்ட சீம்களில் இருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் முறையாகும். திங்கள்கிழமை இந்தப் பணியைத் தொடங்கிய மீட்புக் குழுவினர் அடுத்த நாள் இந்த பணியை செய்து முடித்தனர்.  

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/uttarakhand-tunnel-rescue-operation-a-mountain-moved-41-rescued-9046417/

உள்ளே சிக்கிய தொழிலாளர்களிடம் பேசத் தொடங்கிய போது, முதல்வர் தாமி 3 அணித் தலைவர்கள் சபா அஹ்மத், கப்பர் சிங் நேகி மற்றும் அகிலேஷ் குமார் ஆகிய பேருடன் பேசி வந்தார். இறுதி மீட்புக்கான நேரம் வந்தபோது, ​​​​ஆண்கள் அவர்களின் வயதின் அடிப்படையில் முதலில் வெளியே கொண்டுவரப்பட்டனர். 

இளையவர் முதலில் பின்னர் அணி தலைவர்கள் கடைசியாக வெளியே கொண்டு வரப்பட்டனர். 

 ஜார்க்கண்ட்யைச் சேர்ந்த ஆதித்யா நாயக் என்பவரின் இளைய சகோதரர் குணோதர் நாயக் (28) மற்றும் உறவினர் ரவீந்திர நாயக் (32) ஆகியோர் இந்த சுரங்க விபத்தில் சிக்கினர். அவரது சகோதரர், உறவினர் மீட்கப்பட்ட பிறகு கூறுகையில், "நாங்கள் தீபாவளியை கொண்டாட தவறி விட்டோம், இப்போது நாங்கள் கொண்டாடுவோம்" என்றார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment