Advertisment

இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் வெற்றி... உத்தரகாண்ட் மீட்புப் பணி நிறுவனம் பெருமிதம்

உத்திரகாண்டடில் சுரங்கப்பாதையில் சிக்கய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட எலி துளையிடும் தொழிலாளர்கள் ஹசன், முன்னா குரேஷி, நசீம் மாலிக், மோனு குமார், சவுரப், ஜதின் குமார், அங்கூர், நசீர் கான், தேவேந்திரா, ஃபிரோஸ் குரேஷி, ரஷித் அன்சாரி மற்றும் இர்ஷாத் அன்சாரி ஆகியோர் 20 முதல் 45 வயதுடையவர்கள்.

author-image
WebDesk
New Update
Rat-hole miners

உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சில்க்யாரா-பர்கோட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி முடிந்த பிறகு எலி துளை சுரங்கத் தொழிலாளர்கள்

உத்தரகாண்ட மாநிலத்தின் உத்தர்காசி பகுதியில், சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மீட்பு நடவடிக்கையில் டெல்லியை சேர்ந்த ராக்வெல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : Hindus, Muslims together saved 41 workers in tunnel, says chief of firm that pulled off Uttarakhand rescue

இந்த நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் குழுவில் உள்ளவர்களின் நம்பிக்கை மற்றும் பன்முகத்தன்மையை இல்லை என்றால் இந்த வேலையை செய்திருக்க முடியாது என்று அந்நிறுவனத்தின் தலைவர் வக்கீல் ஹாசன் தெரிவித்துள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய டெல்லியைச் சேர்ந்த ராக்வெல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் வக்கீல் ஹசன் கூறுகையில்,

எங்கள் அணியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் கலந்து இருக்கிறார்கள். மேலும் 41 உயிர்களைக் காப்பாற்ற இந்த இரு மதத்தைச் சேர்ந்தவர்களும் கடுமையாக உழைத்தனர். அவர்களில் யாரும் தனியாக இதைச் செய்திருக்க முடியாது, இது அனைவருக்கும் நான் சொல்ல விரும்பும் செய்தி. நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும், வெறுப்பு விஷத்தை பரப்பக்கூடாது. நாங்கள் அனைவரும் நாட்டிற்காக 100 சதவீதத்தை கொடுக்க விரும்புகிறோம். தயவுசெய்து எனது செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

ராக்வெல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்ந்த 12 பணியாளர்களில், டெல்லியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த 6 பேர் இடம் பெற்றிருந்தனர். சுரங்கத்தை துளையிடும் இயந்திரம் வழிவிட்டபோது அவர்கள் பணிக்காக அழைக்கப்பட்டது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கு இடையில், அவர்கள் சுமார் 12 மீட்டர் குறுகிய குழாய்களில் தோண்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த பணிகளில் ஈடுபட்ட ஹசன், முன்னா குரேஷி, நசீம் மாலிக், மோனு குமார், சவுரப், ஜதின் குமார், அங்கூர், நசீர் கான், தேவேந்திரா, ஃபிரோஸ் குரேஷி, ரஷித் அன்சாரி மற்றும் இர்ஷாத் அன்சாரி என அனைவருமே 20 முதல் 45 வயதுடையவர்கள். இவர்களை குறுகிய குழாய்கள் மூலம் சூழ்ச்சி செய்வதிலும், மண் அகற்றுவதிலும் திறமையானவர்கள். பொதுவாக, இந்த பணியில் உள்ள தொழிலாளர்கள் "எலி துளைப்பான்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

புதன்கிழமை மாலை, அவர்களின் பைகள் பேக் செய்யப்பட்டு, சில்க்யாராவிலிருந்து புறப்படத் தயாரானார்கள். இது குறித்து அவர்களிடம் பேசியபோது, "நாங்கள் டெல்லி ஜல் போர்டில் வேலை செய்கிறோம், எலிகள் போன்ற குழாய்களில் நுழைந்து மண்ணைத் தோண்டுவது எங்கள் வேலை. இரண்டு தொழிலாளர்கள் குழாயின் உள்ளே செல்வார்கள், இதனால் ஒருவர் தோண்டலாம், இரண்டாவது நபர் அந்த மண்னை அகற்றவும், மற்றவர்கள் அதை வெளியேற்றுவதற்காக ஒரு வாளியில் நிரப்புவார்.

சிறிது இடம் உருவாக்கப்பட்டவுடன், குழாய் மேலும் தள்ளப்படும். எங்களின் வேலை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உள்ள வித்தியாசம் பற்றிப் பேசிய அவர், சில்க்யாராவில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அழுத்தம் மேலும் ஊக்கப்படுத்தியது. இங்கு உயிர்கள் ஆபத்தில் இருந்தன. உலகம் முழுவதும் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் நம்மை நம்பி இருந்தனர். இது எங்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியது, ஆனால் நாம் இதைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தையும் இது அளித்தது.

Udh

தோல்வி, சோம்பேறி அல்லது சோர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை… 12-15 மீட்டர் தோண்டுவதற்கு சுமார் 26-27 மணிநேரம் ஆனது. சாதாரண சூழ்நிலைகளில், ஒரே மாதிரியான மண் மற்றும் வேலை நிலைமைகளில், நாங்கள் பொதுவாக 10-15 நாட்கள் எடுத்துக்கொள்வோம். ஆனால் இங்கே நாங்கள் வேலை செய்யவில்லை, உயிரைக் காப்பாற்றுகிறோம், பணி தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்காக குழு தலா ஆறு மணிநேரம் கொண்ட நான்கு ஷிப்டுகளில் வேலை செய்தது.

எங்கள் துறையில், சிறிய மற்றும் ஒல்லியான உடல் அளவு மற்றும் சிறந்த சகிப்புத்தன்மை அவசியம். இந்த வழக்கில், குழாய்கள் வெறும் 800 மிமீ அகலம் மற்றும் சிறுவர்கள் தங்கள் கைகளை நகர்த்துவதற்கு இடம் தேவைப்பட்டது. அவர்கள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தவும், சகதியை அகற்றவும், அவற்றை வாளிகளில் நிரப்பவும், குழாய்களில் இருந்து வெளியே எடுக்க வேண்டியிருந்தது,” என்று ஹசன் கூறினார்.

மேலும் வேலைக்காக பணம் அல்லது சம்பளம் எதுவும் எடுக்கவில்லை "இந்த வேலைக்கு ஈடாக நாங்கள் பணம் எதுவும் விரும்பவில்லை. இது எங்களுக்கு மற்ற வேலைகளை போல் அல்ல, 41 உயிர்களைக் காப்பாற்றும் பணி. எங்களை அழைத்த நிறுவனம், பயணக் கட்டணத்தை வழங்கியது. உத்தரகாசியில் நாங்கள் தேவை என்று எங்கள் மூத்தவர் மூலம் நவயுகம் எங்களை அணுகியது. உடனே ஒப்புக்கொண்டோம், என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment