/indian-express-tamil/media/media_files/GITeDftzpT2pACyFW0YJ.jpg)
உத்தரகாண்ட் சுரங்கப் பாதை விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், 12-வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
Uttarakhand:உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து, அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். 12-வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: As rescue op gathers pace, NDRF steps in to clear last-minute hurdle
வேகமெடுக்கும் மீட்புப் பணி
இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப் - NDRF) குழுவின் பணியாளர்கள் நேற்று புதன்கிழமை இரவு 7.40 மணியளவில் உத்தரகாசி சுரங்கப்பாதையில் நுழைந்தனர். அவர்களின் தனித்துவமான ஆரஞ்சு உடைகள் அணிந்தபடி, ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் மீட்புக் கருவிகளுடன் என்.டி.ஆர்.எஃப் குழு சுரங்கப்பாதை உள்ளே நுழைவதை காண முடிந்தது.
இந்த காட்சிகள் மீட்பு நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், மீட்புப் பணியின் போது சில ஏற்ற தாழ்வுகளும் இருந்தன. சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களின் இடத்திற்கும் வெளியே இருக்கும் இடத்துக்கும் தோராயமாக 50-55 மீட்டர் இடிபாடுகள் சுரங்கப்பாதையைத் தடுக்கின்றன. அதனால் மீட்புப் பணியாளர்கள் சுமார் 45 மீட்டர் நீளமுள்ள இடிபாடுகளைத் துளைக்க தொடங்கினர்.
இருப்பினும், நேற்று மாலையில், மீட்புப் பணியில் மற்றொரு தடை இருந்தது. மாலை 6 மணியளவில், இடிபாடுகளுக்குள் செருகப்படும் குழாய்கள், அதாவது சிக்கியுள்ளவர்களை வெளியே கொண்டுவரப்படும் பைப்புகள் வழியைத் தடுக்கும் வகையில் உலோக கர்டர் இருந்ததால், குழாய்களை மேலும் உள்ளே தள்ள முடியவில்லை. மீட்புக் குழாய்களுக்குள் நுழைவதற்கும், உலோகத் தடைகளை கைமுறையாக வெட்டுவதற்கும் என்.டி.ஆர்.எஃப் குழுவினரை அழைத்தனர். அதனை வெட்ட சில மணி நேரம் எடுத்ததால் மீட்புப் பணியை தாமதப்படுத்தியது.
முன்னதாக, புதன்கிழமை இரவு அல்லது வியாழன் காலைக்குள் ஆண்கள் வெளியே வரலாம் என்று அதிகாரிகள் ஊகமாக தெரிவித்தனர். ஜோஜி லா சுரங்கப்பாதை திட்டத் தலைவர் ஹர்பால் சிங், மேலும் இரண்டு குழாய்கள் செருகப்பட வேண்டும் என்றார். "இரும்பு கம்பிகள் (உலோக கர்டர்கள்) வெட்டப்பட்டவுடன், மீட்புப் பணியாளர்கள் மீண்டும் துளையிடும் பணியைத் தொடங்குவார்கள். காலை 8 மணிக்குள் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் வெளியே வந்துவிடுவார்கள்.
துளையிடும் பணி முடிந்ததும், கமாண்டன்ட் தலைமையில் 21 பேர் கொண்ட என்.டி.ஆர்.எஃப் அதிகாரிகள் குழு, தொழிலாளர்களை தனித்தனியாக வெளியேற்றும் பணியை ஒதுக்கியுள்ளது. மேலும், அப்பகுதிக்கு மருத்துவர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்.
"சிக்கிய தொழிலாளர்களை அடைய சக்கரங்கள் பொருத்தப்பட்ட குறைந்த உயரம் கொண்ட ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தப்பட உள்ளது. ஆக்சிஜன் கிட் பொருத்தப்பட்ட என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கான ஸ்ட்ரெச்சர்கள், கயிறுகள் மற்றும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு மறுபுறம் ஊர்ந்து செல்வார்கள். கயிறுகளைப் பயன்படுத்தி, இரண்டு முனைகளிலிருந்தும் ஒரு ஸ்ட்ரெச்சரைப் பாதுகாப்போம், தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியில் எடுப்போம்.
ஒவ்வொரு தொழிலாளியும் வெளியேற்றப்படும் வரை மற்றொரு என்.டி.ஆர்.எஃப் குழு மறுபுறம் இருக்கும், அதே நேரத்தில் வெளியேற்றப்பட்டவர்கள், மருத்துவர்களுடன், உள்ளே நிறுத்தப்பட்டுள்ள தனி ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்படுவார்கள். இந்த ஆம்புலன்ஸ்கள் சுரங்கப்பாதை தளத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள சின்யாலிசூரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்லும்." என்று ஒரு என்.டி.ஆர்.எஃப் அதிகாரி கூறினார்.
இடிபாடுகளில் துளையிடும் கனரக இயந்திரம் 22 மீட்டர் தூரத்தில் சிக்கலில் சிக்கியதால், மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை மிக முக்கியமான தடையை எதிர்கொண்டனர். மேலும் செயல்முறை நிறுத்தப்பட்டது. பழுதுபார்க்கப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது. புதன்கிழமை மாலைக்குள், 45 மீட்டர் வரை இடிபாடுகளில் ஒரு குழாய் செருகப்பட்டது.
ஆட்களை மீட்பதற்காக ஒரே நேரத்தில் ஐந்து நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் வேலை செய்யத் தொடங்கியிருந்தாலும், சில்க்யாரா முனையிலுள்ளது மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருந்தது. இன்றுக்குள் மீட்பு பணியை முடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
வெளியே, சுரங்கப்பாதையில் சிக்கித் தவிப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அப்போது "எனது அண்ணன் இன்று வெளியே வந்தால் அது எங்களுக்கு தீபாவளியாக இருக்கும்" என்று தம்பியான இந்திரஜீத் கூறினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.