ஈராக், சிரியா மற்றும் இலங்கை என உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு, இஸ்லாமிய பயங்கரவாதம் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் விமர்சித்துள்ளார்.
“ஈராக், சிரியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையிலும் கூட கிறிஸ்தவ இரத்தம் அதிகமாகப் பாய்ந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று போப் பிரான்சிஸ் அனைவரையும் நேசிக்குமாறு அறிவுறுத்திய அதே நேரத்தில் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், என்று வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கண்ணூரில் உள்ள தலச்சேரியில், புதன்கிழமை பேராயர் ஜோசப் பாம்ப்ளனியின் திருப்பலியை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து சர்ச் தலைமைக்கு கவலை இருந்தால் அசாதாரணமானது எதுவுமில்லை. திருச்சபையின் கவலையை மோடி அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கிறது, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு, மத்திய அரசு எதிர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளாது.
சிபிஐ(எம்) தலைவர் ஜார்ஜ் எம் தாமஸ் மற்றும் இடது கூட்டணியான கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே மணி ஆகியோர் “லவ் ஜிகாத்” குறித்த தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர், ஆனால் அவர்களின் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று முரளீதரனும் இடதுசாரிகளை விமர்சித்தார்.
“ஜிஹாத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால் பிஷப்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவது கவலைக்குரிய விஷயம். கிறிஸ்தவ பெண்களை மதமாற்றம் செய்ய திட்டமிட்ட முயற்சி நடப்பதாக திருச்சபைத் தலைமையைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும்? கிறிஸ்தவ பெண்களை லவ் ஜிஹாத்தில் சிக்க வைப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன” என்று அமைச்சர் கூறினார்.
சிபிஐ(எம்) எம்பி ஜான் பிரிட்டாஸ் தனது உரையில், அமைச்சர் அல்லது பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்தார். “ஆட்டு உடையில் ஓநாய்கள் ஜாக்கிரதை,” என்று அவர் கூறினார்.
“மத பயங்கரவாதத்திற்கு” எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கும் மாநில பாஜகவின் நடவடிக்கையின் பின்னணியில் ஒரு தேவாலய நிகழ்வில் மத்திய அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சமீபத்தில், மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 29-ம் தேதி கட்சியின் மாநிலத் தலைமைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும், “மத பயங்கரவாதத்தை” எதிர்ப்பதற்கு எதிரான செயல் திட்டத்தை உருவாக்குவார் என்றும் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“