பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் வரலாறு காணாத அளவு, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 பைசா வீட்டு உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு அரசு உயர்த்தியுள்ளது. இது அடிதட்டு மக்கள் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கும். எனவே, புதுச்சேரி அரசு இதை மறுபரிசலை செய்ய வேண்டும்.
ஸ்மார்ட் மீட்டர் போடுவதை புதுவை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மின்சாரத்துறை தனியார் மயமாக்குவதை புதிய அரசு கைவிட வேண்டும்.. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகரில் ஹைட்ரஜன் சல்பைட் என்று வாய்வு கசிந்து மூன்று உயிர்கள் இழந்துள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் வாய்வு எப்படி கசிந்தது என்பதை ஆய்வு செய்வதற்கு குஜராத் மற்றும் சூரத் நகரில் இருந்து வல்லுனர்களை அழைத்து, இது பற்றி அறிக்கை அளிக்கப்படும் என தலைமைச் செயலாளருக்கு கூறியது மன வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு பல்வேறு வல்லுநர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து தான் நாசாவில் வல்லுநர்கள் பணி புரிகின்றனர். இது தலைமைச் செயலாளருக்கு தெரியுமா? எனத் தெரியவில்லை. சூரத் மற்றும் குஜராத்தில் இருந்து வல்லுநர்களை வரவழைக்க வேண்டிய அவசியம் என்ன?. புதுச்சேரியில் பணிபுரியும் அதிகாரிகளை தலைமைச் செயலாளர் தரக் குறைவாக பேசுவதாகவும் தகவல் உள்ளது. எனவே, அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரத்திலிருந்து ஆயில் எடுக்கும் நிறுவனம் நடத்தி வந்ததில் சுமார் 6.6 லட்சம் மதிப்பிலான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்தனக் கட்டைகள் கேரளாவில் இருந்து வர வைக்கப்பட்டது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கட்டைகளை தமிழ்நாட்டில் சேலத்தில் வழியாக கடத்தி வரும்போது, சேலம் போலீசார் பிடித்துள்ளனர். இதில் பல உண்மைகளை பிடிபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் ஆலை புதுச்சேரியில் இயங்குகிறது. ஆனால், தமிழ்நாடு போலீசார் சந்தன கட்டைகளை பிடித்துள்ளனர். பின்பு கேரளாவில் இருந்து சந்தன கட்டைகள் கடத்தி வரப்பட்டுள்ளன. இது மூன்று மாநில பிரச்சனையாக உள்ளது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி விசாரித்து புதுச்சேரி மக்களுக்கு விளக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“