Vaccine inequity deepens in young : தடுப்பூசி ஒதுக்கீட்டிற்கான வெளிப்படைத்தன்மை இல்லாததை சுட்டிக் காட்டுவதோடு அனைவருக்கும் சமமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்பது குறித்த முக்கியமான கேள்விகளையும் உருவாக்கியுள்ளது. 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி நிர்வகிக்கும் திட்டம் மே 1ஆம் தேதி அன்று இந்த குறிப்பிட்ட வயதினருக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி மேலாண்மையில் ஏழு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 85% தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்த ஆய்வுகள் தடுப்பூசி சமத்துவத்தை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு அளித்த உத்தரவாதங்களில் முரண்பாடு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளது.
மே 1 முதல் 12ம் தேதி வரை 18-44 வயதினருக்கு 34.66 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 85% டோஸ்கள் இந்த மாநிலங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா (6.25 லட்சம்) , ராஜஸ்தான் (5.49 லட்சம்), டெல்லி (4.71 லட்சம்), குஜராத் (3.86 லட்சம்), ஹரியானா (3.55 லட்சம்), பீகார் (3.02 லட்சம்), உத்தரபிரதேசம் (2.65 லட்சம்). டெல்லியைத் தவிர, இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளில் 82.51% பேர் வாழும் மாநிலங்களாக மத்திய அரசு எச்சரிக்கை செய்த 13 மாநிலங்களில் இவை ஆறு ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்ட ஏழு மாநிலங்களில் 85% தடுப்பூசிகள் பதிவாகியுள்ள நிலையில், மீதமுள்ள ஏழு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றினை கொண்ட மாநிலங்களில், 18-44 வயதினருக்கு 5.86% மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த வயதினருக்கு பல மாநிலங்களில் தடுப்பூசி போடுவது தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அதிக கொரோனா தொற்றுநோய் வழக்குகளை கொண்டிருக்கும் கர்நாடகாவில் (5.87 லட்சம்), 74,015 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது அதிக நோயாளிகளை கொண்டிருக்கும் கேரளாவில் (4.24 லட்சம்) இதுவரை 771 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4.8 டன் மருத்துவ ஆக்சிஜனுடன் புறப்பட்டது டேங்கர் லாரி
ஆறாவது அதிக நோயாளிகளைக் கொண்டிருக்கும் ஆந்திராவில் (1.95 லட்சம்) 1133 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஏழாவது அதிக நோயாளிகளைக் கொண்டிருக்கும் தமிழகத்தில் (1.62 லட்சம்) 22,329 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது அதிக நோயாளிகளைக் கொண்டிருக்கும் மே.வங்கத்தில் (1.27 லட்சம்) 12,751 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. 1.21 லட்சம் நோயாளிகளை கொண்டிருக்கும் சத்தீஸ்கரில் 1026 நபர்கள் மட்டுமே தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.
முதலாவதாக, சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட 50%த்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகிக்கும்போது, “நோய்த்தொற்றின் அளவு” (செயலில் உள்ள கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை) தடுப்பூசிகளை ஒதுக்க காரணமாக இருந்த மூன்று அளவுகோல்களில் ஒன்றாக இருந்தது.
ஆனால் இந்த அளவுகோல் தொற்று நோய் பரவலை குறைத்து அதிக தொற்று நோய் ஏற்பட்டிருந்த மாநிலங்களில் இறப்பு வீதத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி வளங்களுக்கான அளவுகோல் இல்லை. இந்த வயதினருக்கான தடுப்பூசியை மாநிலங்கள் சந்தையிலிருந்து பெறவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு பயன்படுத்திய மற்ற இரண்டு அளவுகோல்கள் செயல்திறன் மற்றும் தடுப்பூசியின் வீண் ஆகியவை ஆகும். 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி என்று வரும்போது அவர்களுக்கு இவர் ஒரு பொருட்டாக தெரியவில்லை. தடுப்பூசி வீணாவதை சிறப்பாக குறைத்து கையாண்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது கேரளா. இதுவரை 81.12 லட்சம் டோஸ்களை கொடுத்துள்ளது. ஆனால் இது 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு வெறும் 771 டோஸ்களை மட்டுமே வழங்கியுள்ளது.
மேலும் படிக்க : கடலூர் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி
மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இந்த வயதினருக்கான தடுப்பூசிகள் வழங்கப்படும். எனவே இதனால் மாநிலங்களுக்கு இடையில் தடுப்பூசிகள் கிடைப்பதில் எந்த ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. மே 2021 மாதத்திற்கு ஒவ்வொரு மாநிலமும் பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதாக மத்திய அரசு மேலும் கூறியது, “உற்பத்தியாளர்களிடமிருந்து, இது 18-44 வயதுக்குட்பட்ட மாநில மக்கள்தொகையின் விகித சார்பு எண்ணிக்கையின் அடிப்படையில் இருக்கும் என்றும் தெரிவித்தது. ஆனால் பதிவுகள் இந்த எண்ணிக்கையிலும் ஏற்றத்தாழ்வைக் காட்டுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.