Vaccines for children: இந்தியாவில் 12 வயது முதல் 18 வயதுள்ள 130 மில்லியன் குழந்தைகளில் 80%-த்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. இரண்டு டோஸ்களும் சேர்த்து மொத்தமாக இந்த 80%-த்தினருக்கு 210 மில்லியன் டோஸ்கள் தேவைப்படும்.
ஃபைசரின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி 12 முதல் 15 வயதினருக்கு தரலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் உருவாக்கப்படும் கோவாக்ஸினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வருகிறது. ஆனாலும் இந்த தடுப்பூசி குழந்தைகளிடம் செலுத்தி இன்னும் சோதிக்கப்படவில்லை என்று மூத்த அரசு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஃபைசர் தடுப்பூசிகளை இந்த வயதினருக்கு மட்டுமே பயன்படுத்தினாலும் கூட தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதால் இந்நடவடிக்கை குறித்து ஆய்வதாக அவர் கூறினார்.
மேலும் ஃபைசர் தடுப்பூசி எப்போது இந்தியாவுக்கு வரும் என்பதிலும் இதுவரை தெளிவான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இதனோடு ஒப்பீடு செய்யும் போது, பாரத் பயோடெக் பெரிய அளவில் ஆர்டர்களை கையாள முடியும் என்று தோன்றுகிறது என்று குறிப்பிட்ட அவர் இந்தியாவின் தடுப்பூசி நிர்வாகத்தில் பணியாற்றி வருகிறார்.
ஹைதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி உற்பத்தியாளாரான கோவாக்ஸின் 2 முதல் 18 வயதிலான நபர்களிடம் தடுப்பூசி சோதனையை மேற்கொள்ள சமீபத்தில் அனுமதி பெற்றுள்ளது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில், அதிக அளவிலான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
இந்த குறிப்பிட்ட வயதினரில் 80%-த்தினருக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிடவேண்டும். அதாவது 104 மில்லியன் குழந்தைகளுக்கு 208 மில்லியன் டோஸ்கள் தேவைப்படும். மூன்று டோஸ் தடுப்பூசி தான் தீர்வு என்கிற பட்சத்தில், தடுப்பூசிகளின் தேவை மிக அதிகமாக இருக்கும்.
நாங்கள் தற்போதும் ஃபைசருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். ஆனால் இந்த கட்டத்தில் எதையும் உறுதியாக கூற முடியாது. தடுப்பூசி எப்போது வரும் என்பதையும், அந்த நேரத்தில் நமது கட்டாயங்கள் என்ன என்பதையும் பொறுத்தது என்று பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
ஃபைசரிடம் இருந்து நாம் 50 மில்லியன் தடுப்பூசிகள் வாங்குகின்றோம். ஆனால் இந்த வயதில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம் எனவே 12 முதல் 18 வயதுக்குள் உள்ள குழந்தைகளில் 80% பேருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டம் நமக்கு வேண்டும். ஃபைசரின் எண்ணிக்கை நமக்கு போதாது. கோவாக்ஸின் நம்மிடம் இருந்தால் நாம் அதிக குழந்தைகளுக்கு அதனை செலுத்த முடியும் என்று அவர் கூறினார்.
ஜூன் 4ம் தேதி நடைபெற்ற சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் மருத்துவர் வினோத் கே பால் “இந்தியாவில் 130 மில்லியன் குழந்தைகள் இந்த வயதில் உள்ளனர். சைடஸ் கால்டியாவின் ZyCov-D போன்ற தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளுக்குத் தேவையான தடுப்பூசிகளில் ஒரு பகுதியையும் வழங்கக்கூடும் என்று பால் கூறுகிறார், அவர் கோவிட் -19 (NEGVAC) க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
அகமதாபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் அதற்கான உரிமத்தை பெறும்போது குழந்தைகளுக்கு ஜைகோவ்-டி வழங்க முடியுமா என்பது குறித்து “போதுமான தரவு” இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்று அவர் தெரிவித்தார்.
ஜூலை மாதத்திற்குள் கோவாக்ஸின் 75 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அக்டோபர் மாத இறுதிக்குள் 122 மில்லியன் டோஸ்களாகவும், டிசம்பர் மாதத்திற்குள் 155 மில்லியன் டோஸ்களாகவும் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் துவங்கும் ஜைகோவ்-டி மாதத்திற்கு 10 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும் என்றும் நவம்பரில் அதன் எண்ணிக்கை 13 மில்லியனாக இருக்கும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.