இந்த மழைக்காலம் முழுவதும் பானிப்பூரி சாப்பிடாமல் இருப்பீர்களா?

வதோதரா மாவட்டத்தில் பானிப்பூரி விற்பதற்கு வந்த தடைக்கு பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

பானிப்பூரி, Pani puri ban, Pani puri

பானிப்பூரி உணவுக்கும் மழைக்காலத்திற்கும் என்ன தொடர்பு?

பானிப்பூரி விற்க இந்த மழைக்காலம் முழுவதும் தடை. இந்தியா முழுவதும் பருவமழை தொடங்க உள்ளது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கருதி பல நடவடிக்கைகளை மழைக்காலத்திற்கு முன்னால் மாநில மற்றும் மத்திய அரசுகள் எடுப்பது வழக்கம்.

இப்படியாக குஜராத்தில் ஒரு நடவடிகையை மேற்கொண்டிருக்கிறது வதோதரா முனிபல். அப்பகுதியில் மழை காலம் முடியும் வரை பானிப்பூரி விற்பனை செய்வதை தடை செய்து அறிவித்திருகிறது அரசு.

மழைக்காலத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படுவதனை தடுக்கவும், சுகாதாரமற்ற உணவுப் பழக்கத்தால் மக்கள் அவதிப்படுவதை தடுக்கவும் இம்முடிவினை மேற்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் திடீரென ஆய்வு மேற்கொண்டு சுமார் 50 பானிப்பூரி விற்பனையாளர்களிடம் இருந்து சுமார் 4000 கிலோ பானிப்பூரி மற்றும் 3350 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் இதர மசாலாப் பொருட்களையும் கைப்பற்றியது வதோதரா முனிசிபல்.

வதோதரா முனிசிபலின் இந்த செயலுக்கு ஆதவினையும் எதிர்ப்பினையும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்க் ஆகிக் கொண்டிருக்கிறது பானிப்பூரி மீதான அலாதி பிரியமும், வெறுப்பும்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vadodara municipality bans pani puri for monsoon move evokes mixed response

Next Story
ட்விட்டரில் ஆதார் சேலஞ்சை ஏற்றுக்கொண்ட ட்ராய் சேர்மன் – சேலஞ்சை முறியடித்த பிரான்ஸ் நாட்டு ஹேக்கர்ஆர்.எஸ்.ஷர்மா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X