குற்றப்பிரிவின் (ஆறாவது பிரிவில்) பணிபுரியும் ஒரு கான்ஸ்டபிளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில் தமிழ்நாட்டில் ஒரு கொலையைச் செய்த நபர் இப்போது மும்பையில் உள்ள ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF) நிறுவனத்தில் உள்ள பெட்ரோல் ரசாயன டேங்கர் பிரிவில் பணிபுரிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி இந்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்த தகவல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் ஒரு கொலையை செய்துவிட்டு பின்னர் கொலையாளி மும்பையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், அக்டோபர் 1ம் தேதி போலீஸ் கான்ஸ்டபிள் நாக்நாத் ஜாதவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தென்னிந்தியாவில் ஒரு கொலையை செய்த ஒருவர் ஆர்சிஎஃப்-ல் பதுங்கி இருப்பதாக மட்டுமே அந்த தகவலில் கூறப்பட்டது.
இதையடுத்து போலீஸ் குழு ஆர்.சி.எஃப்க்கு சென்றது. அப்போது அங்கிருந்து
புதன்கிழமை அதிகாலை, ஊழியர் ஒருவர் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இன்ஸ்பெக்டர் பாரத் கோன் தலைமையிலான போலீஸ் குழு அவரை துரத்திச் சென்று இறுதியில் மடக்கிப் பிடித்தது.
பிடிப்பட்ட நபர் சின்ன அய்யனார் (24) என்றும், தமிழகத்தின் வேலூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. எதற்காக தப்பிச் செல்ல முயன்றாய் என்று போலீஸ் குழு அவரிடம் கேட்டபோது, அவர் ஏதோ வேலைக்காகப் போவதாகக் கூறியுள்ளார்.
பின்னர் மும்பை போலீசார் வேலூர் போலீஸாரிடம் பிடிப்பட்ட நபரின் விவரங்களை தெரிவித்தனர். அவர் ஏதேனும் கொலை வழக்கில் குற்றவாளியா எனக் கேட்டனர். வேலூர் போலீசார், இதே அய்யனாரின் புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையின் வேலூர் தெற்கு காவல் நிலையத்தின் ஒரு குழு பின்னர் மும்பை செய்து அய்யனாரைக் காவலில் எடுத்தது. மார்ச் மாதம் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதில் அவரது நண்பரை அய்யனார் கொலை செய்தாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், அய்யனார் மீது கொலை வழக்கு உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சரிந்திரப் பதிவேடு குற்றாவளி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“