Advertisment

கொல்கத்தா மருத்துவமனை மீது தாக்குதல்: டி.எம்.சி தொண்டர்கள், மாணவர்கள், ஜிம் பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு

வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 76 நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
RG Kar

இரண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பதின்பருவம் அல்லது 20 வயதுடைய பல ஆண்கள் மற்றும் பெண்கள் சிலர் - இவர்கள் ஆகஸ்ட் 14 அன்று இரவு ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த வன்முறை தொடர்பாக அடையாளம் காணப்பட்ட அல்லது கைது செய்யப்பட்டவர்கள் ஆவர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது. .

Advertisment

மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்திய போது இந்த வன்முறை நடந்தது. வன்முறையில் மருத்துவமனை படுக்கைகள், வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டது. 

வன்முறை தொடர்பாக விமர்சனங்களை எதிர்கொண்ட போலீசார், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 76 நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, 30 பேரை கைது செய்துள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 15 பேரின் குடும்பங்களுடன் பேசியது - 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக தங்கள் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அன்று இரவு வீட்டை விட்டு வெளியேறி இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது. 

பெரும்பாலானவர்கள் மருத்துவமனையின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கின்றனர், மேலும் சிலர் தங்கள் நண்பர்களுடன் சென்றுள்ளனர். டி.எம்.சி தொண்டர்கள், மாணவர்கள், ஜிம் பயிற்சியாளர், டெலிவரி ஊழியர் எனப் பலர் இதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

சௌமிக் தாஸ், 24: ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில், நாகர்பஜார் காவல் நிலையப் பகுதியில், உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரும் உள்ளூர் டிஎம்சி தொழிலாளியுமான தாஸின் குடியிருப்பு உள்ளது.

போலீஸாரால் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவில் அவர் மருத்துவமனை அவசரகால கட்டிடத்தின் சில பகுதிகளை அடித்து தாக்கியது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“சம்பவத்திற்குப் பிறகு அவர் வீட்டில் இல்லை. போலீசார் வந்து அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் சொன்னார்கள், ஆனால் இறுதியில் அவர் வேறு இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். அவர் உணர்ச்சி வசத்தில் செய்துள்ளார்” என்று அவரது அத்தை கூறினார்.

“அவர் அவர்களுக்காக வேலை செய்தாரா இல்லையா என்பதை கட்சியிடம் கேளுங்கள். இங்கு யாரிடமாவது கேட்டால் - அவர் கட்சிக்காரர் என்று சொல்வார்கள். அவர் தனியாக இல்லை; அவருடன் மற்ற இளைஞர்களும் சென்றனர்,'' என்றார்.

கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, தாஸ் ஒரு பெங்காலி செய்தி சேனலிடம் வன்முறை நடந்த இடத்தில் தான் இருந்ததாக ஒப்புக்கொண்டார். “நான் தவறு செய்து வருந்துகிறேன். நாங்கள் அனைவரும் ஷாம்பஜாரிலிருந்து சென்றோம்... நாங்கள் உணர்ச்சிவசப்படுகிறோம்... எனது ஜிம்மில் உள்ள பலர் அங்கேயும் சென்றனர்,” என்று பி.காம் பட்டதாரியான தாஸ் சேனலிடம் கூறினார்.

ஜப்பார் அன்சாரி, 40: காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில், ஜப்பார் அவசரக் கட்டிடத்திற்குள் இவர் இருந்துள்ளார். மக்களுக்கு அறிவுரைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

ஆங்கிலத்தில் படிக்க:     Vandalism at RG Kar: TMC men, students, gym trainer, delivery staff among accused

அன்று இரவு முதல் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது சகோதரி பச்சியா அப்பா கூறினார். "அவர் எங்கிருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் போலீசார் தினமும் அழைக்கிறார்கள்," என்று அவர் கூறினார். "அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களை தொந்தரவு செய்வது சரியல்ல. எனது சகோதரர்கள் அப்பகுதியில் அறியப்பட்ட டிஎம்சி தொழிலாளர்கள், மரியாதைக்குரியவர்கள் என்றார்.

அவரது மூத்த மகள் 20 வயது, “நான் படத்தைப் பார்த்தேன். அவர் மரியாதைக்குரிய மனிதர். அவர் அவர்களை (குற்றவாளிகளை) மருத்துவமனையை விட்டு வெளியேறச் சொல்லியிருக்க வேண்டும்.

அவரது மூத்த சகோதரரும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

     

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment